Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்!!
கவனிக்கத்தக்க சில அப்டேட்களுடன் 2021 எம்ஜி ஹெக்டர் இந்திய சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் கார் பிராண்ட்களுள் ஒன்று, எம்ஜி மோட்டார் ஆகும். ஏனெனில் புதிய அறிமுகங்களை நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவர இந்த பிரிட்டிஷ் பிராண்ட் பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எம்ஜி பிராண்டில் இருந்து கடைசியாக க்ளோஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகமானது. இதனை தொடர்ந்து பிரதான மாடலான ஹெக்டரில் சிறிய அப்டேட்களை கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக தயாராகும் இந்த 2021 மாடலை ஏற்கனவே பல முறை சோதனை ஓட்டங்களின்போது பார்த்துள்ளோம்.

இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் எம்ஜியின் குஜராத் தொழிற்சாலைக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோ பரோடியன் பாட் ஜடின் என்ற யூடியுப் சேனல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இந்த வீடியோவில் கருப்பு மெஷ் மற்றும் சாடின் சில்வர் நிற பார்டர் உடன் புதிய ரேடியேட்டர் க்ரில் உள்பட சில காஸ்மெட்டிக் மாற்றங்களை சோதனை கார் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. க்ரில், கிடைமட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் மற்றும் முன் பம்பரை சுற்றிலும் தற்போதைய ஹெக்டரில் உள்ளதை போன்ற க்ரோம் அவுட்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் இரட்டை-நிற அலாய் சக்கரங்களை தவிர்த்து வேறெந்த மாற்றமும் இல்லை. பின்பக்கத்தில் இரு டெயில்லேம்ப்களை இணைக்கும் விதத்தில் தடிமனான க்ரோம் அடிக்கோடுடன் புதியதாக கருப்பு கார்னிஷ் வழங்கப்பட்டுள்ளது. அதுவே தற்போதைய ஹெக்டரில் இது சிவப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது.

இவை தவிர்த்து ஹெக்டருக்கும் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்டிற்கும் வெளிப்புறத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஸ்பை வீடியோவில் காரின் உட்புறத்தை பார்க்க முடியவில்லை. ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபினை தற்போதைய மாடலில் உள்ளதை காட்டிலும் வேறுப்பட்ட உள்ளமைவுடன் சற்று வித்தியாசமாக எதிர்பார்க்கலாம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு தற்போதைய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் தேர்வுகளை தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் தொடரவுள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் மைல்ட்-ஹைப்ரீட் யூனிட் இணைக்கப்படலாம். இந்த இரு என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படுகிறது.

பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து கார்களை விடவும் மைல்ட்-ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை எம்ஜி ஹெக்டர் மிக விரைவாக பெறவுள்ளது.

எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படும் ஹெக்டரின் விற்பனையை அதிகரிக்க எம்ஜியின் இது ஒரு தந்திரமே. எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் இந்தியாவில் அடுத்த ஆண்டில் இருக்கும். தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெக்டரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.17.88 லட்சம் வரையில் உள்ளது.