நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

தீ விபத்து சம்பவத்தில் ஹெக்டர் காரை பற்றி பரவிவந்த வதந்திகளுக்கு அந்நிறுவனம் முற்று புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வரும் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார், நடுரோட்டில் தானாக தீ பற்றி எரிவதைப் போன்று வீடியோக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கு எம்ஜி நிறுவனத்திற்கு பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. மேலும், 'மேட் இன் சைனா' கார் என்று கலாய்ப்பிற்கும் உட்படுத்தப்பட்டது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

எம்ஜி நிறுவனம் இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கினாலும் அது அடிப்படையில் சீன தயாரிப்பான செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இதனாலயே, பெரும்பாலானோர் இதனை சீன தயாரிப்பு என கிண்டலடித்து வந்தனர்.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

அதுமட்டுமின்றி, சமீபத்தில் தீப்பற்றி எரிந்த கார் வாங்கி வெறும் 19 நாட்களே ஆனது என்று நமக்கு கிடைத்த தகவின்படி கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலயே இந்த தீ விபத்து சம்பவம் நாடு முழுவதும் காட்டுத் தீயைப் போல் மிக வேகமாக பரவியது.

ஆகையால், தன் மீது ஏற்பட்ட இந்த கலங்கத்திற்கு முற்று புள்ளி வைக்க எண்ணிய எம்ஜி நிறுவனம் இதுகுறித்து ஆய்வு செய்ய இரு குழுக்களை நிர்ணயித்தது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

ஏனென்றால், முன்னதாக இதேபோன்று ஓர் புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் காரும் தீ பிடித்து எரிந்தது. அதுமட்டுமின்றி, எஞ்ஜின் கோளாறு காரணமாக செயலற்று போன சம்பவங்களும் அரங்கேறின. இவ்வாறு, தொடர்ச்சியாக நல்ல வரவேற்பைப் பெற்றும் ஹெக்டருக்கு இழுக்கு ஏற்படும் விதமாக அவ்வப்போது தொழில்நுட்பம் மற்றும் எஞ்ஜின் கோளாறுகள் ஏற்படுவது வாடிக்கையாகியது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

ஆகையால், தற்போதைய நிகழ்வை முந்தையச் சம்பவங்களைப்போல் எளிதாக எடுத்து விடக்கூடாது என எண்ணிய எம்ஜி, அது குறித்து ஆய்வு செய்து தற்போது அந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் தீ பிடித்த சம்பவம் கடந்த 20 (ஜனவரி)-ம் தேதி நடைபெற்றது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

இதனை ஆய்வு செய்வதற்காக நன்கு பயிற்சிபெற்ற இரு குழுவினரின் பயன்படுத்தப்பட்டனர். அதில், ஒரு குழுவினர் எம்ஜி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாகவும், மற்றொரு குழுவினர் அரசு தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

இந்த இரு குழுவினரும் செய்த ஆய்வில் காரின் எரிபொருள் குழாய் அல்லது எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தானது ஓர் சிறிய துணி துண்டால் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

இந்த காரின் எஞ்ஜினின் அதிகம் சூடாகும் பகுதியில் சிறிய துணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிக உஸ்னத்தைத் தாங்க முடியாமல் தீ பிடித்துள்ளது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

தொடர்ந்து, காரின் எஞ்ஜினையும் தீப்பிடிக்கச் செய்துள்ளது. இந்த துணியை எஞ்ஜினை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது என ஹெக்டரின் உரிமையாளர் ஒப்புக் கொண்டார். மேலும், அது நீண்ட நாட்களாக அங்குதான் வைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆகையால், நீண்ட நாட்களாக அதிக வெப்பத்தில் இருந்த துணி 20ம் தேதியன்று எளிதில் தீ பிடித்து ஹெக்டரை நாசமாக்கியது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

இந்த தீ விபத்தை அடுத்து எம்ஜி நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு உரிய நிவாரணத்தை வழங்கியதாக ஹெக்டரைப் பயன்படுத்தி வந்த குடும்பத்தினர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர். முன்னதாக இதேபோன்று, கழுதை முரண்பாட்டு சம்பவத்திலும் எம்ஜி உடனடி நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிகளவு மாடிஃபிகேஷனால் நடைபெற்று என கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த ஆய்வறிக்கை அமைந்துள்ளது.

ஆகையால், வாகனங்களை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தின்மூலம் தெரியவந்துள்ளது.

நடு ரோட்டில் தீ பிடித்த புத்தம் புதிய ஹெக்டர் ... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த எம்ஜி...

எம்ஜி நிறுவனத்தின் இந்த ஹெக்டர் கார் இந்தியாவில் ரூ. 13.48 லட்சம் என்ற ஆரம்ப விலையிலிருந்து, 17.18 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். இந்த கார் இந்தியாவில் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது.

Most Read Articles

English summary
MG Hector Official Statement About Recent Fire. Read In Tamil.
Story first published: Monday, January 27, 2020, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X