சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் வழங்கப்பட்டு இருக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதியை ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலிலும் வழங்குவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

கடந்த ஜூலை மாதம் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரம்மாண்டத் தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது எம்ஜி மோட்டார்.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி க்ளோஸ்ட்டர் பிரிமீயம் எஸ்யூவியில் Advance Driver Assistance Systems (ADAS) என்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதே வசதி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலிலும் கொடுக்கப்பட உள்ளதாக கார்வாலே தள செய்தி தெரிவிக்கிறது.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

இந்த தொழில்நுட்ப வசதி தொகுப்பில் பல்வேறு வசதிகள் இணைந்து செயல்படும் வகையில் இருக்கிறது. அதாவது, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது முன்னால், பின்னால் வரும் வாகனங்களுக்கு தக்கவாறு வேகத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், அவசர காலத்தில் தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் வசதி, தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை வசதிகள் இதில் அடங்குகின்றன.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

ஓட்டுனருக்கு கண்களுக்கு புலப்படாத இடத்தில் இருந்து திடீரென வரும் வாகனங்கள், விலங்குகள், பாதசாரிகள் குறித்த எச்சரிக்கை மற்றும் தானியங்கி முறையில் பார்க்கிங் செய்யும் வசதிகளும் இந்த தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படும். லெவர்- 1 தானியங்கி கார்களுக்கான அம்சங்களை கொண்டதாக இந்த ADAS தொழில்நுட்பம் தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் வழங்கப்பட்ட இந்த வசதி, வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த சூழலில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலிலும் இந்த தொழில்நுட்ப வசதியை அளிப்பதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

இதன்படி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலில் சாவி என்ற விலை உயர்ந்த புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது ஷார்ப் வேரியண்ட்டைவிட விலை அதிகம் கொண்டதாக இருக்கும்.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

புதிய ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலில் 360 டிகிரி கேமரா, 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், ஆட்டோ ஹெட்லைட்டுகள் என பல்வேறு வசதிகளை இந்த வேரியண்ட் வழங்கும்.

சூப்பர்... க்ளோஸ்ட்டரில் உள்ள அசத்தல் தொழில்நுட்பத்தை பெறும் ஹெக்டர் ப்ளஸ்!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலில் 170 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டீச்ல எஞ்சின் மற்றும் 143 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. பெட்ரோல் மாடலில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது. இந்த மாடலில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. எனவே, முன்கூட்டியே தனது ஹெக்டர் ப்ள்ஸ் எஸ்யூவியில் இந்த வசதியை அறிமுகம் செய்ய எம்ஜி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
--

English summary
MG Motor is planning to launch Hector Plus Savvy variant in India very soon and it will feature ADAS (Advanced Driver Assistance Systems) like Gloster SUV.
Story first published: Friday, December 25, 2020, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X