எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

வரும் ஜனவரி துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. அசத்தலான டிசைன், கவரும் தொழில்நுட்ப வசதிகளுடன் மிகச் சரியான விலையில் கிடைப்பதால், இந்தியர்கள் உச்சி முகர்ந்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. இந்த மாடலுக்கு ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் வரும் ஜனவரி 7ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை கார்வாலே தளம் வெளியிட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் சூப்பர் மற்றும் ஷார்ப் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், சூப்பர் என்ற விலை குறைவான வேரியண்ட்டில் 2 வீல் டிரைவ் சிஸ்டமும், ஷார்ப் வேரியண்ட்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட உள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

இதுதவிர்த்து, ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலில் வழங்கப்படும் அதே அம்சங்கள் மற்றும் எஞ்சின் தேர்வுகள்தான் புதிய ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

பெட்ரோல், டீசல் என இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறும். பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு ஆப்ஷனலாக இருக்கும். மேலும், பெட்ரோல் மாடலில் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட்டுகள் தோற்றத்தை தரும் அலங்கார பாகங்கள் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் வேரியண்ட் விபரம் வெளியானது

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ள்ஸ 7 சீட்டர் மாடலில் 10.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், ஐ-ஸ்மார்ட் கனெட்டிவிட்டி தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறும்.

Most Read Articles
English summary
The MG Hector Plus seven-seat variant details have been leaked ahead of its launch in the Indian market. The company will be launching a seven-seat version of the Hector Plus SUV sometime next month.
Story first published: Friday, December 25, 2020, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X