புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

இந்தியா நிறுவனம் இந்த ஜூலை மாதத்தில் ஹெக்டர் ப்ளஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த புதிய எம்ஜி காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவி மாடல் மூலமாக இந்தியாவில் நுழைந்த எம்ஜி மோட்டார் ப்ராண்ட் ஹெக்டரின் 7-இருக்கை வெர்சனாக உருவாக்கப்பட்டுள்ள ஹெக்டர் ப்ளஸ் மாடலை முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

இதனை தொடர்ந்து இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகவுள்ள ஹெக்டரின் இந்த 7-இருக்கை வெர்சன் காருக்கு தற்போது துவங்கப்பட்டுள்ள முன்பதிவு ரூ.50,000 என்ற முன்தொகையுடன் எம்ஜியின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

இந்த காரில் வழக்கமாக 5-இருக்கை ஹெக்டர் மாடலில் வழங்கப்பட்டு வரும் 2.0 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், 48 வோல்ட் மோட்டார் உடன் 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் உள்ளிட்ட என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

ஆனால் அந்த காரை போன்று ஹைப்ரீட் அல்லாத பெட்ரோல் என்ஜினை மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் ஹெக்டர் ப்ளஸ் மாடலை வாங்க முடியாது. இதனால் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் டீசல் மற்றும் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் ஒரே ஒரு 6-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை தான் பெற்றுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

அதேநேரம் இந்த மூன்று என்ஜின் தேர்வுகளும் இதன் டாப் ஷார்ப் ட்ரிம்மிற்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. எண்ட்ரீ-லெவல் சூப்பர் ட்ரிம் வெறும் டீசல் என்ஜின் உடனும், மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் ட்ரிம் டீசல் அல்லது பெட்ரோல்-ஆட்டோ என்ற இரு என்ஜின் தேர்வுடனும் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

அதேபோல் ஆரம்பத்தில் 6 இருக்கை அமைப்பில் தான் இந்த புதிய தயாரிப்பு சந்தைப்படவுள்ளது. இதில் கேப்டன் இருக்கைகள் நடு வரிசையில் இருக்கும். 7 இருக்கை ஹெக்டர் ப்ளஸ் மாடலையும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

16 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த காரில் 7 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, கால்களை பின்பக்கத்தில் நீட்டினாலே போதும் டெயில்கேட் திறக்கும் வசதி, 10.4 இன்ச்சில் தொடுத்திரை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக உள்ளன.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

இவற்றுடன் புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலில் உள்ள எம்ஜியின் ஐ-ஸ்மார்ட் கனெக்டட் கார் தொழிற்நுட்பமானது ஜியோஃபென்சிங், ஃபைண்ட் மை கார், ரிமோட் வாகன கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் உள்பட 55 வசதிகளை வழங்கக்கூடியது. பாதுகாப்பிற்கு இந்த கார் 6 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், இசிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், 360 கோண பார்க்கிங் கேமிரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..

மஹிந்திரா எக்ஸ்யூவி500, விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடல் விளங்கினாலும், எம்ஜி நிறுவனம் இந்த காரை முக்கியமாக பிரபலமான டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவிற்கு போட்டியாகவே கொண்டு வருகிறது. இதனால் தான் இதன் எக்ஸ்ஷோரூம் விலையையும் குறைந்த அளவில் நிர்ணயிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
MG Hector Plus Booking Now Open
Story first published: Tuesday, July 7, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X