அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் ப்ளஸ் மாடல் டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்டோவீல்ஸ் இந்தியா செய்தி தளம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெக்டர் மாடலின் அதிக இருக்கை கொண்ட வெர்சனாக வெளிவரும் இந்த புதிய வேரியண்ட்டின் டீசரை எம்ஜி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த காரின் தயாரிப்பு பணிகள் இந்நிறுவனத்தின் ஹலோல் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

6 இருக்கை அமைப்புடன் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடல் அறிமுகத்திற்கு சில காலத்திற்கு பிறகு 7 இருக்கையிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. வழக்கமான ஹெக்டர் காருடன் வேறுப்பட்டு காணப்படுவதற்காக முன்புறம் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

காரின் முன்பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லேம்ப், திருத்தியமைக்கப்பட்ட ஆக்ஸலெர்ரி லேம்ப், புதிய ரேடியேட்டர் க்ரில் மற்றும் ரீ-ஸ்டைலில் பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் மொத்த தோற்ற அளவில் 5-இருக்கை ஹெக்டர் காரை தான் எம்ஜியின் இந்த புதிய எஸ்யூவி மாடல் ஒத்துள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

இதனால் கூடுதலான நீளத்தில் (வீல்பேஸில் எந்த மாற்றமும் இல்லை) கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தவுடன் உறுதிப்படுத்தி கொள்ள முடியாது. பின்புறத்தில் நம்பர் ப்ளேட்டிற்கு மேற்புறத்தில் ஒரே பகுதியாக டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

இருப்பினும் அதன் இரு முனைகளில் மட்டுமே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின் பம்பர் மற்றும் சில்வர் டிஃப்யூஸர் உள்ளிட்டவையும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. காரின் உட்புற கேபினானது இதன் 5-இருக்கை வெர்சனில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தாலும், கேபினுக்கு வழக்கப்பட்டுள்ள நிறத்தேர்வு வித்தியாசப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் லெதர் இருக்கைகள் பழுப்பு நிறத்தில் உள்ளன. அதேபோல் பிரபலமான மாத்திரை வடிவிலான இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஒடிஏ திறனை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி சைகை காட்டினாலே டெயில்கேட் திருப்பது போன்ற அட்டகாசமான வசதிகளையும் இந்த புதிய கார் கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

ஹெக்டர் மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்ட என்ஜின் அமைப்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலில் கூடுதலான எடைக்கு ஏற்றாற்போல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் கூடுதலாக இருக்குமா என்பது தெரியவில்லை.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மட்டுமோ அல்லது மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடனோ வழங்கப்படலாம். இந்த என்ஜின் அமைப்பு அதிகப்பட்சமாக 143 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்படலாம்.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

டீசல் என்ஜின் தேர்வாக 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட் கொடுக்கப்படவுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும். இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் கூடுதல் தேர்வாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படவுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய நிறத்தில், ஷோரூமில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... ஸ்பை படங்கள் வெளிவந்தன...

5-இருக்கை ஹெக்டர் மாடலை காட்டிலும் வெறும் 1 லட்ச ரூபாய் அளவில் மட்டுமே கூடுதல் விலையுடன் விற்பனை செய்யப்படவுள்ள புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
MG Hector Plus spied at dealership in new colour ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X