போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹெக்டர் எஸ்யூவி மாடலின் மூலமாக காலடி எடுத்து வைத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தைக்கு வருகை தந்து ஓர் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த எஸ்யூவி கார் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்த பாதையை இந்த செய்தியில் காண்போம்.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

இந்த ஒரு வருடத்தில் ஹெக்டர் எஸ்யூவி காருக்கு எம்ஜி நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். விற்பனை மட்டுமில்லாமல் முன்பதிவிலும் இந்த எஸ்யூவி கார் குறைந்த காலத்தில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

ஆனால் கடந்த சில மாதங்களில் கொரோனாவினால் மற்ற மாடல்களின் விற்பனை சரிவை போல் ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனையும் சரிந்துள்ளதை மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் அறிமுகத்தில் இருந்து 8 மாதங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

அதேபோல் இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளும் 50 ஆயிரத்தை கடந்துள்ளன. இந்த நிலையில் இந்திய சந்தையில் இதன் முதல் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எம்ஜி நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

குஜாராத்தில் உள்ள இந்நிறுவனத்தின் ஹலோல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கார் கடந்த ஒரு வருடமாக அதன் போட்டி மாடல்களான எக்ஸ்யூவி500, ஹெரியர் மற்றும் காம்பஸ் உள்ளிட்டவற்றிற்கு விற்பனையில் சிம்ம சொப்பனமாக விளங்கியிருப்பதை இதன் விற்பனை நிலவரம் வெளிக்காட்டுகிறது.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

இந்த ஒரு வருடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து கார்களின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாகும். ஜூன் மாதத்திற்கான விற்பனை நிலவரம் இன்னும் வெளிவரவில்லை. இவற்றை தவிர்த்து பார்த்தோமேயானால் ஹெக்டர் கார் மொத்தம் 22,525 யூனிட்கள் விற்பனையை இந்த ஒரு வருடத்தில் சந்தையில் பதிவு செய்துள்ளது.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

அதுவே மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹெரியர் மற்றும் ஜீப் காம்பஸ் மாடல்கள் முறையே 8,806 யூனிட்கள், 7,947 யூனிட்கள் மற்றும் 5,574 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் ஹெக்டர் காருக்கு சந்தையில் உள்ள வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

இதன் காரணமாக ஹலோல் தொழிற்சாலையில் இந்த எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை அதிகரிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹெக்டரின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமானது. இந்த வேரியண்ட்டில் பொருத்தப்பட்டு வரும் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

ஏப்ரலில் பிஎஸ்6 அப்டேட்டை பெற்ற இதன் டீசல் வேரியண்ட் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனில் இயங்குகிறது. இவை மட்டுமின்றி பெட்ரோல்-ஹைப்ரீடு வேரியண்ட்டிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

போட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...

பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.12.73 லட்சத்தில் இருந்து ரூ.17.72 லட்சம் வரையில் உள்ளது. இந்நிறுவனம் இதன் 7 இருக்கை வெர்சனாக ஹெக்டர் ப்ளஸ் மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
MG Hector Completes One Year In India – Maintains Sales Lead vs Rivals
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X