இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் இந்தியாவிற்கான எம்ஜி ஜி10 எம்பிவி மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எம்பிவி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

இந்த வருடத்தின் துவக்கத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் தனது நிறுவனத்தின் மொத்த திறன் எவ்வளவு என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் வகையிலும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் நீண்ட வரிசையில் தனது தயாரிப்பு மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

இந்த மாடல்களில் ஹோண்டா சிவிக் செடானிற்கு போட்டி காரும், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டி எஸ்யூவி மாடலும் அடங்கும். இவை மட்டுமின்றி இந்திய சந்தையில் வரவேற்பை பெற்றுவரும் கியா கார்னிவலின் போட்டி எம்பிவி மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

இந்த எம்பிவி மாடல் தான் எம்ஜி ஜி10 ஆகும். மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த எம்பிவி காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் தேர்வுகள் இன்னும் கேள்கி குறியாகவே உள்ளது. இருப்பினும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

இந்த என்ஜின்கள் தான் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த என்ஜின் தேர்வுகள் வரும் 2023ஆம் ஆண்டு வரை மட்டுமே வழங்கப்படும். ஏனெனில் அதன்பின் சீனாவில் 6பி மாசு உமிழ்வு விதி அமலுக்கு வருகிறது. சொல்ல முடியாது இந்த புதிய எம்பிவி மாடலில் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமான என்ஜின் கூட பொருத்தப்பட்டிருக்கலாம்.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

எப்படியிருந்தாலும் இந்த 2021 மாடலில் வழங்கப்பட்டுள்ள புதிய டீசல் என்ஜின் முந்தைய 1.9 லிட்டர் டர்போ-டீசல் என்ஜினிற்கு மாற்றாகவே இருக்கும். இந்த 1.9 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைந்து 150 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வந்தது.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி மற்றும் 375 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

முன்னதாக மேக்ஸஸ் ஜி10 மாடலில் பொருத்தப்பட்டு வந்த 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டன. இதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உதவியுடன் 224 பிஎச்பி மற்றும் 345 என்எம் டார்க் திறனையும், ஆட்டோ மேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உதவியுடன் 218 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனையும் இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தி வந்தது.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

இதே ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை தான் தற்போது புதியதாக வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் பெற்றுள்ளது. இந்த புதிய பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 224 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் திறன் கொண்டது.

இந்தியாவிற்கான 2021 எம்ஜி ஜி10 எம்பிவி கார்... மேக்ஸஸ் ஜி10 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம்...

புதிய என்ஜின் தேர்வுகள் மட்டுமின்றி புதிய மேக்ஸஸ் ஜி10 எம்பிவி மாடல் புதிய இருக்கை ஃபாப்ரிக் அமைப்பையும் ஏற்றுள்ளது. முன்பு 7 மற்றும் 9 இருக்கை அமைப்புகளில் மட்டுமே விற்பனையாகி வந்த இந்த எம்பிவி கார் இனி 8-இருக்கை வெர்சனிலும் அங்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 1,39,800 யென்-ஆக (கிட்டத்தட்ட ரூ.14.96 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
India-Bound 2021 MG G10 (Maxus G10) Launched In China
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X