Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்ஜி நிறுவனத்தின் டிசம்பர் ஆஃபர்... ரூ.40,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!
எம்ஜி கார்களுக்கான டிசம்பர் மாத சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சேமிப்புச் சலுகைகள் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆண்டு இறுதியை நெருங்கி வரும் நிலையில், இருப்பில் உள்ள இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களை விற்று தீர்க்கும் நோக்கில் கார் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. ஆஃபர்களை அதிகம் விரும்பாத நிறுவனங்களும் இப்போது ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ் என்ற பெயரில் இந்த ஆஃபரை எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.40,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. பழைய காரை கொடுத்து புதிய ஹெக்டர் அல்லது இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்புள்ளது.

பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யாதவர்களுக்கு பிரத்யேகமான காரை குறிப்பிட்ட ஆண்டுகளில் திரும்ப வழங்கினால் அதற்கு உரிய ரீசேல் மதிப்பை வழங்குவதாகவும் எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களுக்கு 3 ஆண்டுகளில் 60 சதவீத ரீசேல் மதிப்பையும், இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு 3 ஆண்டுகளில் 50 சதவீத ரீசேல் மதிப்பையும் பெறும் வாய்ப்புள்ளது.

அதேபோன்று, ரூ.25,000 மதிப்புடைய ஆக்சஸெரீகள் அல்லது 3 ஆண்டு காலத்திற்கான இலவச பராமரிப்புச் சலுகைகளையும் பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்த சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகள் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு பெற முடியும். இருப்பில் உள்ள கார்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும் என்பதால், விரைவாக முன்பதிவு செய்வது நல்லது.

எம்ஜி கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ் தவிர்த்து, எம்ஜி ரெஃபர் என்ற திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தின்படி, புதிய எம்ஜி கார் மாடலை வாங்க பரிந்துரை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10,000 புள்ளிகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனை எம்ஜி டீலர்களில் காண்பித்து, ஆக்சஸெரீகள் மற்றும் இதர கட்டணங்களுக்கு பயன்படுத்தி கழிவு பெற முடியும்.

அதேநேரத்தில், வாடிக்கையாளரின் பரிந்துரையின் பேரில் மற்றொரு வாடிக்கையாளர் எம்ஜி காரை வாங்கிய பின்னரே இந்த சலுகையை பெற முடியும். இந்த 10,000 புள்ளிகளை 6 மாத காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், ஒருவேளை காரை விற்கும்போது மற்றொரு வாடிக்கையாளருக்கு மாற்றிக் கொடுக்க இயலாது என்பதும் நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.