முதல்ல இன்டர்நெட் கார், அடுத்து தானியங்கி கார்... இந்தியர்களை மெர்சலாக்கும் எம்ஜி மோட்டார்!

இந்தியாவின் முதல் இன்டர்நெட் காரை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து சிலிர்க்க வைத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியர்களுக்கு அடுத்தடுத்து நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், ஆச்சர்யத்தை கொடுக்க தயாராகி வருகிறது. ஆம். ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் வெலல்-3 ஆட்டோனாமஸ் வசதியுடன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வந்து அசத்தி இருக்கிறது.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

எம்ஜி மார்வெல் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் உள்ள எம்ஜி அரங்கத்தில் ரிமோட் முறையில் பார்க்கிங் செய்து பத்திரிக்கையாளர்களை அசரடித்தது. ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக, ரிமோட் கன்ட்ரோல் முறையில் காரை வெளியில் இருந்து முன்புறம், பின்புறம் நகர்த்தி பார்க்கிங் செய்யும் வசதியை அளிக்கிறது.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

அதேபோன்று, இந்த காரில் லெவல் -3 என்ற நிலையிலான ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, மூன்றாம் நிலை ஓட்டுனர் இல்லா கார் தொழில்நுட்பத்தை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கும் நிறுவனம் என்ற பெருமையையும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

இந்த காரில் லெவல் 5 ஆட்டோனாமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்திற்காக, 6 கேமராக்கள், 12 ரேடார் சென்சார்கள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட், எலெக்ட்ரிக் மற்றும் ஆட்டோனாமஸ் என மூன்று விதமான நவீன தொழில்நுட்பங்களை கொண்ட எஸ்யூவியாகவும் இது பெருமை பெறுகிறது.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

எம்ஜி ஹெக்டர் கார் பிரம்மாண்டம் என்று நினைத்தால், அதனைவிட இந்த கார் மிக பிரம்மாண்டமாக உள்ளது. அதாவது, ஹெக்டர் எஸ்யூவியைவிட இந்த கார் 23 மிமீ கூடுதல் நீளமும், 84 மிமீ கூடுதல் அகலமும் கொண்டுள்ளது.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

இந்த கார் க்ளெயின் புளூ அண்ட் ரோவி என்ற பிரத்யேக நீல வண்ணத்தில் வந்துள்ளது. இதுதான் உலகின் உண்மையான நீல வண்ணமாக எம்ஜி பெருமை சொல்கிறது. இந்த புதிய மார்வெல் எக்ஸ் கார் மின்சார மாடலில், சொகுசு கார் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

இந்த காரில் உட்புறமும் மிக பிரிமீயமாக கொடுக்கப்பட்டுள்ளது. லெதர் வேலைப்பாடுகளால் உட்புறம் உன்னதமான உணர்வை வழங்குகிறது. இந்த காரில் 12.3 அங்குல டிரைவர் டிஸ்ப்ளே திரை கொடுக்கப்பட்டுள்ளது. காரின் வேகம், செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

லெவல்-3 தானியங்கி காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்!

இந்த காரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 403 கிமீ தூரம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு சரிநிகரான மாடலாக நிலைநிறுத்த முடியும்.

Most Read Articles

English summary
இன்டர்நெட் காரை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து சிலிர்க்க வைத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியர்களுக்கு அடுத்தடுத்து நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், ஆச்சர்யத்தை கொடுக்க தயாராகி வருகிறது. ஆம். ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் வெலல்-3 ஆட்டோனாமஸ் வசதியுடன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வந்து அசத்தி இருக்கிறது.
Story first published: Wednesday, February 5, 2020, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X