ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் காரை களமிறக்க எம்ஜி மோட்டார் திட்டம்!

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் மிக வலுவான நிலையை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதனை மனதில் வைத்து, எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

கடந்த ஆண்டு வந்த ஹூண்டாய் கோனா காருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்கு போட்டியாக எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்த எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அதைத்தாண்டிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட விலை குறைவு என்பது நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலுக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியால் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு சற்றே நெருக்கடி ஏற்படலாம் என எம்ஜி கருதுகிறது. மேலும், எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

இதற்காக ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆட்டோஃப்யூச்சரர்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள எம்ஜி மோட்டார் உயர் அதிகாரி கவுரவ் குப்தா கூறுகையில்,"இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

ரூ.10 லட்சத்திற்குள் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினால் அது சிறந்ததாக இருக்கும். மேலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி ஆலையையும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோமொபைல் கண்காட்சியில், எம்ஜி மோட்டார் நிறுவனம் சிறிய வகை எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. மேலும், அதன் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த செயிக் குழுமம், பவ்ஜுன் பிராண்டில் விற்பனை செய்யும் இ200 மற்றும் இ300 எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விரைவாக கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

இதுகுறித்தும் எம்ஜி மோட்டார் ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. ஆனால், இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்குவதற்கும் எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த புதிய மாடல் இந்தியாவி்ல அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார் திட்டம்!

இதற்கு தக்கவாறு, இந்தியாவில் சார்ஜிங் கட்டமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இதனை மனதில் வைத்து, பெருநகரங்களில் உள்ள தனது டீலர்களில் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் நடமாடும் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் போன்ற வசதிகளை வழங்குவதிலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் எம்ஜி மோட்டார் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Most Read Articles
English summary
British carmaker, MG Motor is planning to launch an affordable electric car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X