விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

இது தொடர்பாக எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 அக்டோபரில் 3,750 கார்களின் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 48 சதவீதம் அதிகம் ஆகும்.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

ஏனெனில் அந்த மாதத்தில் 2,537 கார்களையே இந்நிறுவனத்தால் விற்க முடிந்ததுள்ளது. அதேபோல் 2020 அக்டோபரின் 3,750 என்ற எண்ணிக்கை 2019 செப்டம்பரில் விற்பனையான 3,536 கார்களின் எண்ணிக்கையை விடவும் 6 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

இந்த மொத்த எண்ணிக்கையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக அறிமுகப்படுத்திய ஹெக்டர் மட்டுமே 3,625 யூனிட்களின் விற்பனையாகியுள்ளது. ஆனால் 2020 செப்டம்பரில் 2,410 ஹெக்டர்கள் தான் விற்பனையாகி இருந்தன. பிராண்டின் இசட்எஸ் எஸ்யூவி கடந்த மாதத்தில் 125 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

விற்பனையில் இத்தகைய முன்னேற்றம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சிடானா கருத்து தெரிவிக்கையில், "பண்டிகை தேவையினால் கடந்த மாதத்தில் 48% வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். இத்தகைய சூழல் தீபாவளி காரணமாக தொடர்ந்து இந்த நவம்பர் முழுவதும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

அதேநேரம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தயாரிப்புகளையும் அதிகரித்து வருகிறோம். க்ளோஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகத்தின்போது அறிவிக்கப்பட்ட விலையினால் நிர்ணயிக்கப்பட்ட 2,000 முன்பதிவுகளை இந்த எஸ்யூவி கார் தாண்டிவிட்டது" என கூறினார்.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

எம்ஜியின் சமீபத்திய அறிமுகமான க்ளோஸ்டர், தாராளமாக 7 நபர்கள் அமரக்கூடிய எஸ்யூவி காராகும். ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் நான்கு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனையில் 48% முன்னேற்றத்துடன் தீபாவளியை கொண்டாடும் எம்ஜி!! இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

க்ளோஸ்டரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.28.98 லட்சமாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள விற்பனை அறிக்கையின் மூலமாக மாதத்திற்கு மாதம் எம்ஜி நிறுவனம் முன்னேற்றத்தை கண்டுவருவதை அறியலாம். இதே நிலை 2020ன் இந்த கடைசி இரு மாதங்களுக்கும் தொடரும் என அந்நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

Most Read Articles

English summary
MG Motors Registers 48% Growth In Terms Of Monthly Sales. The company has released their sales figures for the month of October 2020. Of the total sales figures, the retail figures of the MG Hector stood at 3,625 units of sales.
Story first published: Saturday, November 7, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X