சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

வாடிக்கையாளர்களிடம் ஆவலை ஏற்படுத்திய புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியர்களின் கனவு கார் மாடலாக மாறி இருக்கிறது. டிசைன், இன்டர்நெட் வசதி, இடவசதி, விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக மாறியது.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், இதன் 7 சீட்டர் மாடல் குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எம்ஜி நிறுவனத்திடம் வினவி வந்தனர்.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

எனவே, வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்ட எம்ஜி மோட்டார் தற்போது ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலையும் களமிறக்க உள்ளது. அடுத்த மாதம் ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் நடுவரிசையில் பெஞ்ச் வகை இருக்கை அமைப்பு இடம்பெற்றிருக்கும். இதன்மூலமாக, நடுவரிசை இருக்கையில் மூன்று பேர் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும்.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களுக்கு இடையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், இரண்டு பிரிவாக கொடுக்கப்படும் பனோரமின் சன்ரூஃப், இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் 143 எச்பி பவரையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 எச்பி பவரையும் வழங்க வல்லதாக இருக்கும்.

சூப்பர் நியூஸ்... எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல் அறிமுக விபரம் வெளியானது!

பெட்ரோல் மாடல் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் தேர்விலும் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். பெட்ரோல் மாடலின் ஹைப்ரிட் இல்லாத வேரியண்ட்டில் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
MG Motor is all set to launch Hector Plus 7 seater model in India by January 2021.
Story first published: Friday, December 18, 2020, 14:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X