க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் காரின் ஸ்பை படங்கள் பெங்களூருவில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் கடந்த ஆண்டில் ஹெக்டரின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்தது. அதன்பிறகு சமீபத்திய அறிமுகம் க்ளோஸ்டர் எஸ்யூவி மற்றும் 6 இருக்கைகளை கொண்ட ஹெக்டர் ப்ளஸ் என சில கார்களை நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டுவந்தது.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

அவற்றில் ஒன்றாக இசட்எஸ் எலக்ட்ரிக் கார் கடந்த 2020 பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இசட்எஸ் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

நமது ட்ரைவ்ஸ்பார்க் தளத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்களில் கார் கிட்டத்தட்ட அதன் எலக்ட்ரிக் வெர்சனையையே ஒத்து காணப்படுகிறது. அளவை வைத்து பார்த்தோமேயானால், எம்ஜி இசட்எக்ஸ் கார் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக விளங்கும்.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

க்ரெட்டாவின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4300மிமீx 1790மிமீx 1620மிமீ ஆகும். இசட்எஸ் இவி காரின் இந்த அளவுகள் 4314மிமீx 1809மிமீx 1620மிமீ என உள்ளன. அளவில் ஹெக்டரை காட்டிலும் சிறியதாக இருந்தாலும், க்ரெட்டாவை காட்டிலும் சற்று பெரியதாகவே இருக்கும்.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

என்னதான் அளவில் ஒரே மாதிரி இருந்தாலும் இசட்எஸ் பெட்ரோல் காரில் வித்தியாசமான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற சர்வதேச சந்தைகளில் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் காரில் 1.5 லிட்டர் விடிஐ மற்றும் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

இதில் 1.5 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், 1.3 லிட்டர் என்ஜின் 161 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற ஒரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன.

க்ளோஸ்டரை தொடர்ந்து இசட்எஸ் பெட்ரோல் காரை இந்தியா கொண்டுவரும் எம்ஜி!! பெங்களூருவில் சோதனை ஓட்டம்

ரூ.20.88 லட்சத்தில் இருந்து ரூ.23.58 லட்சம் வரையிலான விலைகளில் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் கார் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சோதனை ஓட்டங்களினால் அதன் பெட்ரோல் காரின் அறிமுகத்தை மிக விரைவாகவே எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
MG ZS Petrol Spied Testing In Bangalore
Story first published: Saturday, December 26, 2020, 17:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X