டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெருமை வேணும்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம் அதன் குறிப்பிட்ட உதவிக்காக இந்திய ஜாம்பவனான டாடா பவர் நிறுவனத்தை நாடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எம்ஜி. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் கால் தடம் பதித்தது. இது இந்தியாவில் களமிறங்கியதை வெளிப்படுத்தும் விதமாக ஹெக்டர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. இந்த கார் யாரும் எதிர்பார்க்காத விலையில் அதிக அம்சங்களைக் கொண்டதாக களமிறங்கியதால் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இதைத்தொடர்ந்தே, தன் நிறுவனத்தின்மீது இந்தியர்கள் மத்தியில் தோன்றியிருக்கும் நல்ல அபிப்பராயத்தையும், சந்தையையும் தக்க வைத்துக்கொள்ளும் விதமாக அடுத்த இரண்டாம் மாடலாக எம்ஜி இசட்எஸ் மின்சார காரை அந்நிறுவனம் களமிறக்கியது. இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆனால், ஹெக்டருக்கு கிடைத்த அளவிற்கு அந்த வரவேற்பு இல்லை.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இதற்கு இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை இன்னும் ஆரம்பநிலையில் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. இந்தியர்களிடத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டாலும், அது இன்றளவும் குழந்தைநிலை பருவத்திலேயே உள்ளது. இதற்கு, மின்சார வாகனங்களுக்கான போதிய கட்டமைப்பு இல்லாததே மிக முக்கிய காரணமாக உள்ளது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இதன்காரணத்தினாலயே மாருதி சுசுகி போன்ற ஒரு சில ஜாம்பவான் நிறுவனங்கள்கூட இந்திய வாகன சந்தையில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற பற்றாக்குறையைத் தீர்த்து, தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொள்ளும் விதமாக எம்ஜி நிறுவனம் இந்திய ஜாம்பவானான டாடாவுடன் இணைந்துள்ளது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

ஆம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கட்டமைப்பதற்காகவே டாடா குழுமத்தின் ஓர் அங்கமான டாடா பவருடன் எம்ஜி கூட்டு வைத்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள ஷோரூம் மற்றும் டீலர்ஷிப்களில் அதி வேக சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. அவை, 50KW டிசி திறன் கொண்ட சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் ஆகும்.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இந்த சார்ஜிங் நிலையத்தில் எம்ஜி இசட்எஸ் மின்சார கார் மட்டுமின்றி பிற நிறுவனங்களின் மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அவை சிசிஎஸ் / சிஎச்ஏடிஎம்ஓ (CCS / CHAdeMO) ஆகிய தரம் கொண்ட கார்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் எம்ஜி நிறுவனத்தின் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இவ்வாறு, சார்ஜிங்க மையங்களை உருவாக்குவதன் மூலம் அதன் மின்சார கார்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் அதிகம் பயனடைவார்கள் என அது எதிர்பார்க்கின்றது. அதுமட்டுமின்றி, சார்ஜிங் நிலையம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன்மூலம் மின்சார வாகன பயனர்கள் அதிகரிப்பார்கள் எனவும் அது நம்புகின்றது. ஏனென்றால், தற்போது வரை மின்சார வாகனத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

அதேசமயம், எம்ஜி நிறுவனம் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நாட்டின் சில முக்கிய நகரங்களில் மட்டுமே நிறுவ திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில், தலைநகர் டெல்லி, மும்பை, அஹமதாபாத், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செயல்படும் அதன் ஷோரூம்களில் மட்டுமே சார்ஜிங் நிலையத்தை உருவாக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இத்துடன், விரைவில் இந்தியாவின் கூடுதல் சில நகரங்களிலும் இந்த சார்ஜிங் மையங்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. அதேசமயம், மறுபக்கம் டாடா பவர், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்புகளை அதிகரிக்கச் செய்யும் விதமாக 180 சார்ஜிங் பாயிண்டுகளை நாட்டின் 19 முக்கிய நகரங்களில் அமைக்கும் பணயில் இறங்கியுள்ளது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இந்த நடவடிக்கைகளின்மூலம் விரைவில் இந்தியாவில் மின்சார வாகன பிரியர்கள் அதிகரிக்கலாம் என தெரிகின்றது. பலர் தற்போது வரை மின்சார வாகனங்களின் அதிக விலையைக் காட்டிலும், சார்ஜிங் நிலைய பற்றாக்குறை காரணத்தினாலயே அவற்றைப் பயன்டுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, இந்த நிலையை இவ்விரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி லேசாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இந்த நடவடிக்கைக்கு முன்னதாக எம்ஜி நிறுவனம், சமீபத்தில் அதன் இரு ஷோரூம்களை சென்னையில் திறந்தது. இசட்எஸ் மின்சார காருக்காவே பிரத்யேக திறக்கப்பட்ட அந்த ஷோரூம்களில் ஒன்று சென்னை அண்ணாசாலை, நந்தனம்பகுதியிலும், மற்றொன்று பழைய மஹாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பெருங்குடி தொழிற்பேட்டைப் பகுதியிலும் திறக்கப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய ஷோரூம்கள் அறிமுகத்தை முன்னிட்டு ஏற்கனவே அந்தந்த நகரங்களில் மின்சார கார்களுக்கான புக்கிங் தொடங்கப்பட்டுவிட்டது. அது கடந்த 1ம் (ஜூன்) தேதியில் இருந்தே தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ஆன்-லைன் மற்றும் நேரடி விசிட் ஆகியவற்றின் மூலம் செய்து வருகின்றது.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார், டிசைன், செயல்திறன், ரேஞ்ச், விலை என அனைத்திலும் நிறைவைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது.. இந்த காரில் 44.5 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய சாதாரண மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி, வழக்கமான சார்ஜிங் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்தால், பேட்டரி முழுமையடைய 8 மணிநேரங்களை எடுத்துக் கொள்ளும். அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜை பெற்றுவிடும்.

டாடா நிறுவனத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து நிறுவனம்... இந்தியாவிற்கு இதவிட வேற என்ன பெறுமை வேணும்!

இந்த கார் இந்தியாவில் இரு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதில் எக்ஸைட் வேரியண்ட்டிற்கு ரூ. 20.88 லட்சம் என்ற விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ. 23.58 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
MG Partners With Tata Power to Install 50 kW Charging Station For EV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X