எஸ்யூவி அம்சங்களுடன் ஒரு செடான் கார்... எம்ஜி மோட்டார்ஸின் அடுத்த அசத்தல் மாடல்!

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியர்களுக்கு புதுவிதமான கார் மாடல்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இந்திய சாலைகளுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட புதியத செடான் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி உள்ளது.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

எம்ஜி ஆர்சி-6 என்ற பெயரில் இந்தியாவில் பொது பார்வைக்கு வந்திருக்கும் இந்த புதிய கார் எஸ்யூவி போன்று அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த காரின் மிக முக்கியமான ஹைலைட் விஷயமாக இருக்கிறது.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

இந்த கார் 198 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிரு்ககிறது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி கார் போன்று இந்த கார் மிக தனித்துவமான டிசைனில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

அதேநேரத்தில், எம்ஜி நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, அழகிய அலாய் வீல்கள், வசீகரிக்கும் கூரை அமைப்பு மற்றும் பின்புற டிசைன் என இந்தியர்களை கவரும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

இந்த கார் 4,925 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், 2,800 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. அதாவது, மிக சிறந்த இடவசதியை அளிக்கும்.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

இந்த காரில் இரண்டு திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் ஏராளமான பிரிமீயம் அம்சங்கள் உள்ளன.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

எம்ஜி ஹெக்டரில் இருக்கும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

எம்ஜி ஆர்சி6 செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது!

ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காருக்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து விற்பனைக்கு களமிறக்கும் திட்டத்தை எம்ஜி மோட்டார்ஸ் வைத்துள்ளது. எனினும், வரும் மார்ச் மாதத்தில் இந்த புதிய செடான் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
MG Motor has showcased unique styled RC6 sedan car at Auto Expo 2020.
Story first published: Wednesday, February 5, 2020, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X