தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

டொயோட்ட ஃபார்ச்சூனர் காருக்கு நேரடி போட்டியாளனாக களமிறங்கியிருக்கும் எம்ஜி குளோஸ்டரின் டெலிவரி பணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

எம்ஜி நிறுவனத்தின் பிராமாண்ட எஸ்யூவி ரக காராக குளோஸ்டர் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பதால் வாகன ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், ஆர்வத்துடன் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கே இக்காரை டெலிவரி கொடுக்கும் பணியில் எம்ஜி களமிறங்கியிருக்கின்றது.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

இந்த கார் நான்கு விதமான வேரியண்டுகள் (சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவ்வி) மற்றும் ஆறு அல்லது ஏழு இருக்கை வசதிகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, இந்தியாவின் பிற பிரமாண்ட கார்களான டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் ஃபோர்டு என்டீயோவர் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

எம்ஜி குளோஸ்டர் ரூ. 29.98 லட்சத்தில் இருந்து ரூ. 35.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையில் யாரும் எதிர்பார்த்திராத பல்வேறு சிறப்பு வசதிகளை இக்காரில் எம்ஜி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பலர் இக்காரை போட்டிப் போட்டுக் கொண்டு புக்கிங் செய்து வருகின்றனர். இதன் புக்கிங் டொயோட்டோ ஃபார்ச்சூனர் காரை நேரடியாக மிரட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. அவ்வாறு, புக்கிங் செய்த நபர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் காரை எம்ஜி நிறுவனம் டெலிவரிக் கொடுத்து வருகின்றது.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

எம்ஜி குளோஸ்டர் காரில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சமே அதன் தானியங்கி வசதிதான். ஆமாங்க, இந்த காரின் டாப் வேரியண்ட் அவசர காலத்தில் தானாக பிரேக் பிடிக்கும் மற்றும் வேகக் கட்டுப்பாட்டை இயக்கும் வசதியைப் பெற்றிருக்கின்றது. இதற்கான தன்னாட்சி வசதி இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த வசதியுடன் களமிறங்கிய முதல் கார் இதுவே ஆகும்.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

Image Courtesy: MG Delhi East And MG Cochin

இதுதவிர, இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை இக்கார் உள்ளடக்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 12.3 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. லக்சூரி, பிரீமியம் மற்றும் பன்முக டிரைவிங் மோட்களும் குளோஸ்டரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், க்ரூஸ் கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றிற்கான பொத்தான்கள் ஸ்டியரிங் வீலிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

ஆகையால், இக்காரை இயக்கும்போது துளியளவும் அசௌகரியமான உணர்வு ஏற்படாது. குளோஸ்டர் எஸ்யூவி 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், முதல் எஞ்ஜின் 163 பிஎஸ் மற்றும் 375 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதேபோன்று ட்வின் டர்போ எஞ்ஜின் 218 பிஎஸ் மற்றும் 480 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

இவ்விரு எஞ்ஜின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேகக்கட்டுப்பாடு கருவியுடன் இணைந்து இயங்குகின்றது. இந்த கார் தற்போது வரை எதிர்பார்த்திராத அளவிலான புக்கிங்கைப் பெற்று வருகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அறிமுகம் செய்யப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் 2,000க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங் பெறப்பட்டுள்ளது.

தொடங்கியது எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவியின் டெலிவரி பணி... வெடவெடத்து நிற்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்...

இவர்களுக்கே தற்போது குளோஸ்டர் கார்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. எக்கச்சக்கமான வரவேற்பை இக்கார் பெற்று வருவதால் இந்த ஆண்டிற்கான அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
MG Starts Gloster Delivery in In India: Here Are the Full Details. Read In Tamil.
Story first published: Friday, November 20, 2020, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X