எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய இந்திய அறிமுக மாடலான இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியை டெலிவிரி செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இதன்படி முதற்கட்டமாக, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸ் லிமிட்டட் (EESL) என்ற நிறுவனத்திடம் எம்ஜி நிறுவனம் டெலிவிரி செய்துள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது இந்திய மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி மாடலின் மூலம் இந்தியாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த எலக்ட்ரிக் கார்கள் அரசாங்க பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க முடியும் என எம்ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

44.5 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி அமைப்புடன் உள்ள எலக்ட்ரிக் மோட்டாரை இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கொண்டுள்ளது. இந்த மோட்டார் 141 பிஎச்பி பவரையும் 353 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகிறது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் இந்தியாவில் தற்சமயம் உள்ள எலக்ட்ரிக் கார்களிலேயே மிக பெரிய பேட்டரியை பெற்ற காராக விளங்குகிறது. விரைவான சார்ஜரை இந்த எலக்ட்ரிக் கார் நிலையாக கொண்டுள்ளதால், இந்த பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 1 மணிநேரம் மட்டுமே தேவைப்படும்.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

இந்த எலக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் 340கிமீ தூரம் வரை இயங்கும் திறனுடையது. எம்ஜி நிறுவனத்தின் இந்த இசட்எஸ் எலக்ட்ரிக் மாடல், எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என இரு வேரியண்ட்களில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கவுள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

இதில் எக்ஸைட் வேரியண்ட் காரில் 17 இன்ச் அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், எலக்ட்ரிக்கலாக சரி செய்யக்கூடிய ஒஆர்விஎம்கள், லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கைனெட்டிக் எனர்ஜி ரிக்கவரி சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக உள்ளன.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

பாதுகாப்பு அம்சங்களாக ஆறு காற்றுப்பைகள், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு, ஐசோஃபிக்ஸ் அமைப்பால் சான்றளிக்கப்பட்ட குழந்தைக்களுக்கான இருக்கை மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்கை இந்த எக்ஸைட் வேரியண்ட் கொண்டுள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

மற்றொரு எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட், எட்டு இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், ஆறு விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஐ-ஸ்மார்ட் 2.0 இணைப்பு தொழிற்நுட்பம், பவர் ஒஆர்விஎம்கள் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றை எக்ஸைட் மாடலில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

புதிய எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் இந்த இரு வேரியண்ட்களின் விலையும் இந்திய எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.20.88 லட்சம் மற்றும் ரூ.23.58 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தற்சமயம் மும்பை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட 5 நகரங்களில் இருந்து மட்டும் டெலிவிரி செய்யப்படுகின்றன.

எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிகள் துவக்கம்.. முதல் காரை வாங்கியுள்ளது யார் தெரியுமா?

வருங்காலங்களில் இந்திய போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மிக பெரிய பங்காற்றும் என்பது உறுதி. அத்தகைய பசுமையான போக்குவரத்திற்கான தொடக்கம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜி நிறுவனம், இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியை டெலிவிரி செய்துள்ள என்ர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸ் லிமிட்டட் நிறுவனம் தற்போதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

Most Read Articles

English summary
MG ZS Electric SUV Deliveries Begin: First Vehicle Delivered To EESL
Story first published: Tuesday, January 28, 2020, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X