Just In
- 32 min ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 1 hr ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 3 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 14 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- Sports
4வது போட்டியில வெற்றிக்கு போராடும் இந்தியா... குறுக்கால மழை வரும்னு சொல்றாங்க!
- News
காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோவை உள்பட 10 புதிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... உற்பத்தியிலும் புதிய மைல்க
கோவையில் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் உற்பத்தி எண்ணிக்கையிலும் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஜனவரி மாதம் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அறிமுகம் செய்தது முதல் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், ரேஞ்ச், விலை என அனைத்திலும் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் உற்பத்தி 1,000 யூனிட்டுகள் என்ற மிக முக்கிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. இது எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதே உற்சாகத்துடன் மேலும் 10 புதிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 11 நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது கோவை, நாக்பூர், ஆக்ரா, டேராடூன், லூதியானா, கொல்கத்தா, அவுரங்காபாத், இந்தூர், லக்ணோ மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வோருக்கு விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். அதே அளவுக்கு சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பை விரிவுப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது எம்ஜி மோட்டார்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

இந்த பேட்டரியை 50kW டிசி சார்ஜர் பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இந்த காரில் ஒரு கிலோமீட்டர் பயணிப்பதற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே மின்சார செலவு பிடிக்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவிக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் எக்ஸ்சைட் வேரியண்ட் ரூ.20.88 லட்சத்திலும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் ரூ.23.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. ஹூண்டாய் கோனா எஸ்யூவி நேரடி போட்டியாளராக உள்ளது.