இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

எம்ஜி இசட்எஸ் மாடல் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் இந்தியாவிற்கு வரவுள்ளது. இதற்கிடையில் இந்த எரிபொருள் என்ஜின் கார் தற்போது சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படத்தினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

கடந்த ஆண்டில் ஹெக்டர் மூலமாக இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் நுழைந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட காரான இசட்எஸ் இவி-ஐ சந்தைக்கு கொண்டுவந்தது.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

அதன்பின் சமீபத்தில் அறிமுகமான ஹெக்டர் ப்ளஸ் மாடல் உள்பட தற்சமயம் இந்நிறுவனத்தில் இருந்து மொத்தம் 3 தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியிலும் எம்ஜி ஈடுப்பட்டு வருகிறது.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக வெளியாக க்ளோஸ்டர் எஸ்யூவி, ஜி10, போஜன் 510 மற்றும் இசட்எஸ்-ன் பெட்ரோல் மாடல் உள்ளிட்டவை தயாராகவுள்ளன. இதில் முதலாவதாக எந்த கார் வெளியாகவுள்ளது என்பது தான் கேள்வி.

பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள இசட்எஸ் சில மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை ஏற்றுள்ளது. இந்த மாற்றங்களில் புதிய ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் உடன் ரீ-டிசைனில் வடிவமைக்கப்பட்ட காரின் முன்பகுதி முக்கியமானதாக உள்ளது.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

ஹெட்லேம்ப் மட்டுமின்றி முன் மற்றும் பின்புறத்தில் உள்ள பம்பர்களின் வடிவங்களிலும் எம்ஜி நிறுவனம் வேலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் அலாய் சக்கரங்களும் புதிய இரட்டை-நிறத்தில் வழங்கப்பட்டுள்ளதை தற்போது ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படம் வெளிக்காட்டுகிறது.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள எம்ஜி இசட்எஸ் காரில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட், 360 கோண கேமிரா மற்றும் நாவிகேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலமாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவற்றை இணைக்க முடியும்.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

அதேபோல் ஸ்டேரிங் சக்கரமும் தட்டையாகவும் தாழ்வாகவும் வழங்கப்படுகிறது. மேலும் மற்ற நாட்டு சந்தைகளில் இசட்எஸ் காரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு, 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு மற்றும் 1.5 லிட்டர் N/A என்ற மூன்று பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் சோதனை... இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள எம்ஜி கார் இதுதானா..?

இதில் டர்போசார்ஜ்டு என்ஜின்கள் இரண்டும் முறையே 109 பிஎச்பி/160 என்எம் மற்றும் 123 பிஎச்பி அல்லது 161 பிஎச்பி ஆற்றலையும், இயற்கையான பெட்ரோல் என்ஜின் 105 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியவை.

ஆனால் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள இசட்எஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ற இரு என்ஜின்கள் தான் தேர்வுகளாக வழங்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
MG ZS Petrol facelift spotted in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X