Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 3 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்பவே முடியல! வெறும் ரூ.1,700க்கு ஏலத்திற்கு வந்த பிரபல விளையாட்டு வீரரின் சொகுசு கார்!
பிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் சொகுசு காரொன்று மிக மிகக் குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆன்லைன் ஏலத்தில் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வருவது வாடிக்கையான விஷயமே. ஆனால், யாருமே நம்ப முடியாத வகையில் பிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் சொகுசு கார் மிக மிகக் குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்துள்ளது.

1996 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்தான் அது. இக்காரே தற்போது 23 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்திற்கு வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1,700 மட்டுமே ஆகும். இந்த கார் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரரான மைக்கேல் ஜோர்டான் அவர்களுக்கு சொந்தமானது ஆகும். மிக வேகமான விளையாட்டுக்கு பெயர்போன இவர், மிகப் பெரிய வாகன காதலரும் ஆவார்.

எனவேதான் அவரிடத்தில் எண்ணற்ற விலையுயர்ந்த லக்சூரி மற்றும் சூப்பர் கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவ்வாறு கடந்த காலங்களில் மைக்கேல் ஜோர்டானிடத்தில் பயன்பாட்டில் இருந்த ஓர் அரிய வகை காரே தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இக்காருக்கு மிக மிகக் குறைந்த விலை (தொகை) நிர்ணயித்திருப்பதற்கு, அக்கார் வெகு நீண்ட நாட்களாக பயனற்று இருந்ததே முக்கிய காரணமாக உள்ளது.

இருப்பினும், மைக்கேல் ஜோர்டானின் இந்த கார் தோராயமாக ரூ. 75 லட்சத்திற்கும் அதிகமாக ஏலத்தில் எடுக்கப்படலாம் என ஏலம் விடும் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதனை 'பெவர்லி ஹில்ஸ் கார் கிளப்' எனும் நிறுவனமே ஏலத்திற்கு விட்டுள்ளது. இந்த நிறுவனம் மிக சமீபத்தில்தான் அக்காரை வாங்கியிருந்தது.

இதைத்தொடர்ந்தே அக்காருக்கான விற்பனை ஏலத்தை அது தொடங்கியிருக்கின்றது. மிக சமீபத்தில் தொடங்கப்பட்ட இக்காரின் மீதான ஏலம் வருகின்ற ஆகஸ்டு 23ம் தேதி வரை நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தகமான இபே (eBay) தளத்தில் ஜோர்டானின் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

நேவி நீல நிறத்தில் காட்சியளிக்கும் இக்காரையே ஜோர்டான் அதிக பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதனாலயே அவரின் பிற கார்களைக் காட்டிலும் இக்கார் அதிக தூரம் பயணித்த காராக இருக்கின்றது. இதன் ஓடோ மீட்டர் கார் 1,57,000 மைல்கள் பயணித்திருப்பதைச் சுட்டுக் காட்டுகின்றது. ஜோர்டான் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 காரை அதிகம் பயன்படுத்தியதற்கான சான்றாக இது இருக்கின்றது.

இது ஓர் 1996 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 காராக இருந்தாலும், தற்போது பார்ப்பதற்கு புது பொலிவில் காட்சியளிக்கின்றது. இக்காரில், வி12, 6.0 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 389 குதிரை திறன் மற்றும் 420 டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இக்காரில் எலெக்ட்ரானிக்கலாக அட்ஜெஸ்ட் செய்யும் டேம்பர் வசதி இடம் பெற்றிருப்பது கவனிக்கூடிய அம்சமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, தற்போதும் இக்காருக்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் 18 இன்ச் மோனோ பிளாக் வீல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், கஸ்டமைஸ் செய்யப்பட்ட எக்சாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை டிஎம்இசட் ஸ்போர்ட்ஸ் எனும் அந்நாட்டு செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தகையச் சிறப்பு வாய்ந்த காருக்கே பெவர்லி ஹில்ஸ் கார் கிளப் நிறுவனம், மிகக் குறைந்த விலையாக ரூ. 1,700ஐ ஆரம்ப ஏலத் தொகையாக நிர்ணயித்துள்ளது. அதேசமயம், இதன்மீது பல மடங்கு லாபத்தை அது எதிர்பார்த்தும் இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பு கைக் கொடுக்கும் என்றே பலரால் யூகிக்கப்படுகின்றது.

ஏனெனில், இக்கார் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டான் பயன்படுத்தியது என்பதையும் தாண்டி, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அரிய வகை மாடல்களில் ஒன்றாக இருக்கின்றது. கார் ஆர்வலர்கள் மத்தியில் இம்மாதிரியான விண்டேஜ் கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

எனவே, விண்டேஜ் மற்றும் மைக்கேல் ஜோர்டானின் கார் என இரு சிறப்புகளைக் கொண்டிருக்கும் இக்கார் பல மடங்கு லாபத்தில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மட்டுமின்றி அண்மையில் மைக்கேல் ஜோர்டானின் காலணிகள்கூட (ஷூ) ஏலத்திற்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது. அந்த ஷூ ஜோர்டானின் கால்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவையாகும். இதுவே, அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் ஷூவாகும்.