இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

மினி இந்தியா நிறுவனம் புதிய ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஜிபி-ஆல் கவரப்பட்ட எடிசனை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மினி கூப்பர் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

ஒவ்வொரு வருடமும் சரியாக தீபாவளி சமயத்தில் புதிய அறிமுகங்களை இந்திய சந்தைக்கு கொண்டுவருவதை மினி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த வரிசையில் இந்த வருட தீபாவளிக்கு புதிய மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஜிபி-ஆல் கவரப்பட்ட எடிசன் வந்துள்ளது.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

வெறும் 15 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த லிமிடேட் எடிசன் காரை மினி இந்தியா இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.46.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

ரேசிங் சில்வர் என்ற ஒற்றை நிறத்தில் மட்டுமே வாங்கக்கூடிய வகையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள மினி கூப்பர் கார் ஜிபி வாகனம் மற்றும் வசதிகளினால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில்வர் மெட்டாலிக் நிறம் பக்கவாட்டு கண்ணாடி மேற்பகுதிகளிலும் மேற்கூரையிலும் மற்றும் ஜே.சி.டபிள்யூ ஸ்பாய்லரிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

பியானோவின் கருப்பு நிறத்தை காரின் வெளிபுறங்களில் ஹெட்லேம்ப்கள், எரிபொருள் நிரப்பும் பகுதியின் மூடி, கதவு கைப்பிடிகள், மினி லோகோ மற்றும் க்ரில்லை சுற்றிலும் பார்க்க முடிகிறது. 18 இன்ச் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறத்தில் ஜிபி ஹப் மூடியுடன் உள்ளன.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

எதிர்வரும் காற்றை ஏற்கும் காரின் முன்பகுதி கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறம் ஸ்போர்ட்ஸ் இருக்கைகளுடன் முழுக்க முழுக்க லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே தரை பாய்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதே சிவப்பு நிறத்தை ஸ்டேரிங் சக்கரத்திலும் பார்க்க முடிகிறது.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

பெடல் ஷிஃப்டர்கள் 3டி-இல் அச்சடிக்கப்பட்ட ஜிபி முத்திரையுடன் உள்ளன. ஜே.சி.டபிள்யூ வளையாத இரும்பு பெடல் மூடிகளும் இந்த காரில் உள்ளன. இவற்றுடன் பனோராமிக் சன்ரூஃப-ஐயும் புதிய மினி ஜான் கூப்பர் கார் பெற்றுவருகிறது.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

காரில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் இரட்டைபவர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 231 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த வருட தீபாவளிக்கான புதிய மினி கூப்பர் கார் விற்பனைக்கு வந்தது!! விலை ரூ.47 லட்சம்

ஆப்பிள் கார்ப்ளே, நாவிகேஷன், 360 வாட் ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட வசதிகளை இந்த லிமிடேட் எடிசன் காரில் மினி நிறுவனம் வழங்கியுள்ளது. இரண்டே இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்டுள்ளதால், இந்த காரில் பயணித்தால் முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் காரின் உணர்வு வரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
The MINI John Cooper Works GP Inspired Edition launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X