லிவிங் ரூம் வசதியுடன் கார்! பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுதே

சொகுசு வசதிகளின் தலைவன் என்று கூறுமளவிற்கு ஓர் காரை மினி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

லக்சூரி அம்சங்களுக்கு தலைவன் என்று கூறுமளவிற்கு மினி நிறுவனம், ஓர் காரை வடிவமைத்துள்ளது. இந்த காருக்கு விஷன் அர்பானாட் எனும் பெயரை அந்த நிறுவனம் வைத்திருக்கின்றது. இக்காரை தற்போது கான்செப்ட் மாடலாகவே அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

கான்செப்ட் காராக இருந்தாலும் இது பலரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த காரின் லக்சூரி வசதிகள் சொகுசு பயண பிரியர்களை அதிகளவில் கவர்ந்திருக்கின்றது. இதற்கு காரின் கேபினே முக்கிய காரணம் ஆகும். ஆமாங்க, ஒட்டுமொத்த சொகுசு வசதியையுமே மினி நிறுவனம், விஷன் அர்பானாட் காரின் கேபினுக்குள் மட்டுமே இறக்கியிருக்கின்றது.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

ஷோஃபா போன்ற 'எல்' வடிவத்திலான இருக்கை மற்றும் அதற்கு மிக அருகாமையில் சுழலக்கூடிய ஒற்றை இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், மேடை அமைப்பும் நிறுவப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற வசதிகளை நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் கார்களில் மட்டுமே நம்மால் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

இத்தகைய சிறப்பு வசதிகளையே மினி நிறுவனம் விஷன் அர்பானாட் காரில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரை பார்ப்பதற்கு சிறியதாகக் காட்சியளித்தாலும் அதன் இட வசதி நாம் எதிர்பார்த்திராத வகையில் அமைந்துள்ளது. பிற மினி தயாரிப்புகளைக் காட்டிலும் இதில் அதிக இட வசதிக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அதிக இட வசதிக்காக இக்காரை 4460 மிமீ நீளத்தில் மினி வடிவமைத்திருக்கின்றது. இதன் கேபின் மட்டுமின்றி உடல் தோற்றமும் மிகவும் கவர்ச்சியானதாக வடிமைவமைக்கப்பட்டிருக்கின்றது. வீல் முதல் ஹெட்லைட் வரை இதுவரை நாம் எந்தவொரு வாகனத்திலும் பார்த்திராத டிசைன் மற்றும் தோற்றத்தில் அவை காட்சியளிக்கின்றன.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

குறிப்பாக, பின்பகுதி தோற்றம் மற்றும் மின் விளக்குகள் மனம் கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. இதுதவிர, லக்சூரி வீடுகளில் காணப்படும் லிவிங் ரூமைப் போன்றிருக்கும் இந்த காரின் கேபினுக்குள் மியூசிக் சிஸ்டம், பெரிய திரை உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் வழங்கப்பட இருக்கின்றன. எனவேதான் இந்த வாகனத்தை சொகுசின் தலைவன் என பலர் கூறத் தொடங்கியிருக்கின்றனர்.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

தொடர்ந்து, மன நிலைக்கு ஏற்ப ஒளிரக்கூடிய ஆம்பிசியண்ட் மின் விளக்கு, நவீன ரகத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் இக்காரில் இடம்பெற இருக்கின்றன. இக்கார் பெருவாரியான தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை. மேலும் இக்கார் எப்போது பயன்பாட்டுக்கு வரக்கூடிய தயாரிப்பு மாடலாக மாறும் என்ற தகவலையும் நிறுவனம் அறிவிக்கவில்லை.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

ஆகையால், எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், பல வருடங்கள் இதன் அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் மின்சார கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தன்னிச்சையாக இயங்கக்கூடிய திறனில் வெளிவரும் என உறுதியான தகவல்கள் தெரிவித்துள்ளன.

லிவிங் ரூம் வசதியுடன் கார்... பிரபல நிறுவனத்தின் கான்செப்ட் மாடல் கார் அறிமுகம்... ஃபோட்டோவே சும்மா அல்லுது!

அதேசமயம், பலர் இந்த காரை உற்பத்தி சாத்தியமில்லா வாகனம் என கூறத் தொடங்கியிருக்கின்றனர். ஆகையால், எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூணடியிருக்கும் மினி விஷன் அர்பானாட் கார் பற்றிய தகவலுக்கு ஒரு சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
Mini Reveals Vision Urbanaut Concept. Read In Tamil.
Story first published: Wednesday, November 18, 2020, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X