இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

இந்திய சந்தையில் வெற்றிக்கரமான எஸ்யூவி மாடலாக உள்ள மஹிந்திரா பொலிரோ, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 மாடலுக்கு இணையாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யுவிலாக்ஸ் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு சந்தையில் அதீத வரவேற்பு கிடைத்தாலும், மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ மாடலில் உள்ளதை போன்ற ப்ரீமியம் தரத்திலான வசதிகளை இந்த கார் கொண்டிருக்கவில்லை. இதுவே பல வாடிக்கையாளர்கள் தங்களது பொலிரோ மாடல்களை கஸ்டமைஸ்ட் பணிகளுக்கு உட்படுத்துவதற்கு காரணமாக உள்ளது.

இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

இந்த வகையில் தற்போது புதுமையான தோற்றத்திற்கு மாறியுள்ள பொலிரோ மாடலில் முன்புறம் 4-கதவு அமைப்புடன் வழக்கமான தோற்றத்தில் தான் உள்ளது. ஆனால் பின்புறம் தட்டையான படுக்கை அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

இந்த கூடுதலான படுக்கை அமைப்பினால் மொத்த காரின் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் பின் சக்கரங்களுக்கு நெருக்கமாக கூடுதலாக இரு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் என்ஜின் அமைப்பும் 2.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினால் மாற்றப்பட்டுள்ளது.

இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் வழங்கப்பட்டு வருகின்ற இந்த டர்போசார்ஜ்டு டீசல் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும். இந்த என்ஜின் அமைப்பு, மாருதி ஜிப்ஸி மாடலை போன்று அனைத்து சக்கரங்களுக்கும் ஆற்றலை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

காரின் எரிபொருள் திறனை அதிகரிக்க மூன்றாவது சக்கர அச்சை நீக்கவும், தேவையென்றால் மீண்டும் சேர்த்து கொள்ளவும் முடியும் என கஸ்டமைஸ்ட் குழுவினர் தெரிவித்துள்ளனர். மற்ற முக்கியமான அம்சமாக இந்த கஸ்டமைஸ்ட் பொலிரோ காரில் 6x6 ஹார்ட்வேரும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே இந்த மஹிந்திரா பொலிரோ டஃப் கொடுக்கும்

இதுமட்டுமின்றி காரின் முன்புறமும் 4-லேம்ப் செட்அப் உடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. காரின் புறப்படு கோணத்தை மேம்படுத்துவதற்காக கஸ்டம் பம்பர்கள் இந்த மாடிஃபைடு பொலிரோ மாடலில் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்புறத்தில் பொருட்களை கட்டி இழுப்பதற்கு புதியதாக ரோல்-பார் வழங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி 31-இன்ச் மேக்ஸிஸ் பக்‌ஷாட் மட்டர் டயர்களுடன் ஸ்டீல் சக்கரங்களை இந்த கஸ்டமைஸ்ட் பொலிரோ மாடல் ஏற்றுள்ளது. மேனுவலாக 2 வீல் ட்ரைவ் சிஸ்டத்திலும் இயங்கக்கூடிய இந்த கார் மூன்றாவது சக்கர அச்சினால் ஆஃப்-ரோடு திறனில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளதை வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்டுகிறது.

Most Read Articles
English summary
Modified Mahindra Bolero 6X6 Is A Must Have For All Off-road Enthusiasts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X