கார்களுக்கே டஃப் கொடுக்க கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்! விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்

புதுமுக தானியங்கி கார்களுக்கே டஃப் கொடுக்கக் கூடிய வசதியுடன் புதிய டிராக்டர் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

கார்களுக்கே டஃப் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்... விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்!!

விவசாயியிகளுக்கு பெரும் உதவியாக இருப்பதில் டிராக்டர்களின் பங்கு அளப்பறியது. இந்த வாகனத்தை பிரபல டிராக்டர் நிறுவனம் ஒன்று யாரும் எதிர்பார்த்திராத நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்களில் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வரும் தானியங்கி தொழில்நுட்ப வசதியே புதிய டிராக்டரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

கார்களுக்கே டஃப் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்... விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்!!

பிரபல மோனார்க் டிராக்டர் நிறுவனமே அதன் எதிர்கால டிராக்டரை தானியங்கி வசதியுடன் உருவாக்கியிருக்கின்றது. இந்த டிராக்டரை தற்போது அது அமெரிக்காவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த டிராக்டர் மின்சார திறனால் இயங்கக்கூடிய எலெட்க்ரிக் டிராக்டர் ஆகும். ஓட்டுநர் இல்லாமலேயே பல்வேறு பணிகளை தானாக செய்யக் கூடிய திறன் இந்த டிராக்டருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பு வசதியுடன் அறிமுகமாகும் உலகின் முதல் மின்சார டிராக்டர் இதுவே ஆகும்.

கார்களுக்கே டஃப் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்... விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்!!

தொடர்ச்சியாக 10 மணி நேரங்கள் நீடித்து உழைக்கக்கூடிய 55கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த டிராக்டரில் வழங்கப்பட்டுள்ளது. இது டீசல் எந்திரம் கொண்ட டிராக்டரை விட மிக சிறப்பான முறையில் செயல்பட உதவும். மேலும், டிராக்டராக மட்டுமின்றி அனைத்து சாலைகளிலும் இயங்கக்கூடிய வாகனமாகவும் (All-Terrain Vehicle) இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கார்களுக்கே டஃப் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்... விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்!!

இதனை சிறப்பு ஸ்மார்ட்போன் செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. செல்போன் ஆப் வழியாக கொடுக்கப்படும் கட்டளை இந்த டிராக்டர் டிரைவரே இல்லாமல் தன்னிச்சையாக செய்து முடிக்கும். களப்பணி, மருந்து தெளித்தால் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இது மிகவும் சுலபமாக செய்யும். ஆகையால் விவாசியிகளின் உற்ற நண்பனாக இது செயல்படும் என கூறப்படுகின்றது.

கார்களுக்கே டஃப் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்... விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்!!

டிராக்டரில் 360 டிகிரி பார்வைத் திறன் கொண்ட கேமிரா வழங்கப்பட்டிருக்கின்றது. இது செல்போன் வாயிலாக டிராக்டரைக் கட்டுப்படுத்த உதவும். இத்துடன், பதிவுகளைச் சேகரிக்கும் விதமாக 240 ஜிபி திறன் கொண்ட சிப் இணைக்கப்பட்டுள்ளது. இது தகவல்களைச் சேகரிப்பதோடு, ஏற்கனவே சேகப்பட்ட தகவல்களின்கீழ் இயங்க வைக்க உதவும்.

கார்களுக்கே டஃப் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் டிராக்டர் அறிமுகம்... விவசாயியிகள் லெவல் இனி வேறலெவல்!!

இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய டிராக்டரில் மோனார்க் அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு விலையாக 50,000 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், அமெரிக்காவில் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் டெலிவரிக் கொடுக்கப்பட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Monarch Unveiled Self-Drive e-Tractor In US. Read In Tamil.
Story first published: Wednesday, December 9, 2020, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X