பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்தியாவில் கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் பண்டிகை காலம் காரணமாக கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கார் விற்பனை சிறப்பாக இருந்தது. இந்த வரிசையில் கடந்த நவம்பரும், கார் நிறுவனங்களுக்கு சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு நவம்பரில் பெரும்பாலான செக்மெண்ட்கள் வளர்ச்சி கண்டுள்ளன. இதன்படி பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டும், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் சுமார் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோவின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் என்ற பெருமை பலேனோவிற்கு கிடைத்துள்ளது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 விற்பனைக்கு வந்துள்ள போதிலும், மாருதி சுஸுகி பலேனோவின் விற்பனை நிலையாக உள்ளது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

நடப்பாண்டு நவம்பர் மாதம் 17,872 பலேனோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 18,047 ஆக இருந்தது. இது 0.97 சதவீத வீழ்ச்சியாகும். போட்டி அதிகரித்துள்ளதை கணக்கில் வைத்து பார்க்கும்போது இதனை பெரிய வீழ்ச்சி என கூறி விட முடியாது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் புதிய ஹூண்டாய் ஐ20 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் கடந்த 2019ம் ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு நவம்பரில் ஐ20 காரின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 10,446 ஐ20 கார்களை விற்பனை செய்திருநதது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 9,096 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 6,260 அல்ட்ராஸ் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

இது நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய கார் ஆகும். எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை 2019ம் ஆண்டு நவம்பருடன் ஒப்பிட முடியாது. எனினும் பலேனோ மற்றும் ஐ20 போன்ற வலுவான போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், அல்ட்ராஸ் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது. இந்த செக்மெண்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை வைத்திருக்கும் ஒரே கார் அல்ட்ராஸ் மட்டும்தான். இது டாடா அல்ட்ராஸ் காருக்கு விற்பனையில் பெரிதும் உதவி செய்து வருகிறது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

இதற்கிடையே இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் 2,313 யூனிட்களாக இருந்த க்ளான்சா கார்களின் விற்பனை நடப்பாண்டு நவம்பரில் 2,428 ஆக உயர்ந்துள்ளது. இது 4.97 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி பலேனோ கார்தான் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் 5வது இடத்தை ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிடித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் வெறும் 632 யூனிட்களாக இருந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் விற்பனை நடப்பாண்டு நவம்பரில் 1,134 ஆக உயர்ந்துள்ளது. இது 79.43 சதவீத வளர்ச்சியாகும். 6வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1,702 போலோ கார்களை விற்பனை செய்திருந்தது.

பலேனோ, ஐ20, அல்ட்ராஸ்... கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் எதுன்னு தெரியுமா?

ஆனால் நடப்பாண்டு நவம்பரில் வெறும் 1,130 போலோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது 33.61 சதவீத வீழ்ச்சியாகும். 7வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா ஜாஸ் பிடித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் வெறும் 341 ஹோண்டா ஜாஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 633 ஆக உயர்ந்துள்ளது. இது 85.63 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles
English summary
Most Sold Premium Hatchback Cars In November 2020. Read in Tamil
Story first published: Wednesday, December 9, 2020, 2:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X