Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 3 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபலமான ஃபோர்டு எண்டேவியரில் புதியதாக ஸ்போர்ட் எடிசன்... சில ஷோரூம்களை வந்தடைந்தது...
கருப்பு எடிசன் என அழைக்கப்படும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசனின் ஸ்பை படங்கள் இந்திய டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் கருப்பு எடிசன் கார்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இதனால் தான் டாடா, ஜீப் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளில் கருப்பு எடிசனை கொண்டுவந்துள்ளன.

இந்த வகையில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் என்டேவியரில் ஸ்போர்ட் எடிசன் என்ற பெயரில் கருப்பு எடிசன் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் தற்போது 91வீல்ஸ்செய்திதளத்தால் வெளியாகியுள்ள இதன் ஸ்பை படங்கள் ஃபோர்டின் இந்த புதிய தயாரிப்பு டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியிருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

மேலும் இந்த படங்கள் ஸ்போர்ட் எடிசன் மூலமாக 7-இருக்கை எஸ்யூவி ரக காரான எண்டேவியரின் தோற்றத்தில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் கவர்ச்சிக்கரமான அப்டேட்களை கொண்டுவந்துள்ளதையும் வெளிக்காட்டுகின்றன.

இந்த புதிய எடிசன் காரில் கவனிக்கத்தக்க அப்டேட் என்று பார்த்தால், முன்பக்க க்ரில், முன் பம்பரின் கீழ்பகுதி, அலாய் சக்கரங்கள் மற்றும் பக்கவாட்டில் இருக்கும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் க்ரோம் பாகங்களையும் அதிகளவில் பார்க்க முடியவில்லை.

ஆனால் ஸ்போர்ட் எடிசன் என்பதை வெளிக்காட்டும் விதமாக காரை சுற்றிலும் ஸ்போர்ட் முத்திரைகளை பார்க்க முடிகிறது. மற்றப்படி இந்த தோற்ற மாறுபாடுகளை தவிர்த்து இந்த ஸ்போர்ட் எடிசனில் வேறெந்த மெக்கானிக்கல் மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ஃபோர்டு மோட்டார்ஸ் எவரெஸ்ட் மாடலின் ஸ்போர்ட் எடிசன் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எண்டேவியரின் இந்த ஸ்போர்ட் எடிசனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் ஃபோர்டு நிறுவனம் எண்டேவியரை சில நாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் தான் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் எண்டேவியர் தற்சமயம் டைட்டானியம் 4x2 ஆட்டோமேட்டிக், டைட்டானியம் ப்ளஸ் 4x2 ஆட்டோமேட்டிக் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் 4x4 ஆட்டோமேட்டிக் என்ற 3 ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த மூன்று ட்ரிம்களிலும் புதிய ஸ்போர்ட் எடிசன் விற்பனைக்கு கிடைக்குமா என்பது சரியாக தெரியவில்லை. எண்டேவியரில் 167 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினை ஃபோர்டு நிறுவனம் பொருத்தி வருகிறது.

இந்த என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவற்றுடன் விற்பனையில் மல்லுக்கட்டி வரும் ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்போர்ட் எடிசனின் விலை ப்ரீமியம் தரத்தில் நிர்ணயிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஸ்பை படங்கள் மூலம் ஃபோர்டு நிறுவனம் எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசனை ஷோரும்களுக்கு அனுப்பும் பணியினை துவங்கிவிட்டது என்பது நிரூபணமாகிவிட்டதால், இந்த ஸ்பெஷல் எடிசன் கார் மிக விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் கூறுகின்றன.