புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

மிக நீண்ட மாத எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஒருவழியாக 2020 ஹூண்டாய் ஐ20 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது. இந்த சமயத்தில் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள என்ஜின் தேர்வுகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

ஜெர்மனியில் 13.6 ஆயிர யூரோ (ரூ.12.15 லட்சம்)-வை விலையாக பெற்றுள்ள புதிய ஐ20 மாடலில் நாம் எதிர்பார்த்ததுபோல் புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஐ20-ன் விலை 18 ஆயிர யூரோவாக (ரூ.16 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

i20 Engine 1.2L MPi 1.2L T-Gdi 1.0L T-GDI 48V 1.0L T-GDI 48V
Type 4-cylinder MPi 3-cylinder Gdi 3-cylinder Gdi 3-cylinder Gdi
Turbocharged No Yes Yes Yes
Hybrid No No Yes, 48V mild-hybrid Yes, 48 V mild-hybrid
Power 84 PS @ 6,000 rpm 100 PS @ 6,000 rpm 100 PS @ 6,000 rpm 120 PS @ 6,000 rpm
Torque 118 Nm @ 4,000 rpm 172 Nm @ 1,500 rpm 172 Nm @ 1,500 rpm 200 Nm @ 2,000 rpm
Transmission 6MT 6 MT / 7 DCT 6 iMT / 7 DCT 6 iMT / 7 DCT
0-100 kmph 13.1 S 10.4 / 11.4 S 10.4 / 11.4 S 10.2 / 10.3 S
புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் மட்டுமின்றி வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற என்ஜின்களும் தொடர்ந்துள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 84 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 118 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

வென்யூ, அவ்ரா மற்றும் வெர்னா உள்ளிட்ட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பொருத்தப்படுகின்ற இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 100 பிஎச்பி மற்றும் 1,500 ஆர்பிஎம்-ல் 172 என்எம் டார்க் திறனை பெறலாம். மேலும் இந்த டர்போ என்ஜின், 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கும் தேர்வையும் கொண்டுள்ளது.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

இந்த அமைப்பின் மூலமாக 6000 ஆர்பிஎம்-ல் 120 பிஎச்பி பவரையும், 2000 ஆர்பிஎம்-ல் 200 என்எம் டார்க் திறனையும் பெற முடியும். இந்த மைல்ட்-ஹைப்ரீட் என்ஜினின் உதவினால் வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 2-3 சதவீதம் குறைவாக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

புதிய ஐ20 மாடலின் உலகளாவிய அறிமுகம் கொரோனா வைரஸினால் ரத்தான 2020 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இணைய தளம் மூலமாக ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

இதன் இந்திய வெர்சன் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் உடனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் நமது நாட்டு சந்தையில் டீசல் கார்களுக்கு இன்னும் போட்டி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதேநேரம் புதிய மைல்ட் ஹைப்ரீட் தேர்வை அறிமுகமாகும்போது இந்த 2020 காரில் எதிர்பார்க்க முடியாது.

புதிய மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் 2020 ஹூண்டாய் ஐ20 ஜெர்மனியில் அறிமுகம்... இந்திய வருகை எப்போது..?

இந்தியாவில் இதன் அறிமுகம் வருகிற அக்டோபரில் இருக்கலாம். இந்திய எக்ஸ்ஷோரூமில் 2020 ஹூண்டாய் ஐ20-ன் விலை ரூ.5.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இவை தற்போது ஜெர்மனியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை காட்டிலும் மிகவும் குறைவுதான், ஆனால் ஜெர்மனியில் அந்த விலையே குறைவானதாகும்.

Most Read Articles

English summary
2020 Hyundai i20 Engine Specs Detailed – 6MT, iMT and 7DCT on offer Table Code
Story first published: Thursday, August 20, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X