ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

ஆடியின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திற்கு ஏ4 செடான் காரின் பெயர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆடி காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

2021ஆம் ஆண்டில் முதல் ஆடி காராக ஐந்தாம் தலைமுறை ஏ4 செடான் கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரூ.45 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையினை இந்த 2021 மாடல் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

மஹராஷ்டிரா, அவ்ரங்காபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகளை ஆடி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. காருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டு இருந்தன.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

இதற்கான டோக்கன் தொகையை ரூ.2 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரின் பெயர் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

2021 ஆடி ஏ4 செடான் காரில் புதிய 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 192 பிஎஸ் பவரை இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை கார் வெறும் 7.3 வினாடிகளில் எட்டிவிடும்.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

அதிக எட்ஜ்களுடன் புதிய ஆடி ஏ4 முன்பை காட்டிலும் ஸ்போர்டியரான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10.11 இன்ச்சில் ஆடியின் புதிய எம்எம்ஐ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளதால் ஏ4 முழு-கனெக்டட் காராகும்.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

இந்த 2021 காரில் புதிய ஹெட்லைட்கள், ரீடிசைனில் பம்பர்கள், இரட்டை எக்ஸாஸ்ட் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் தொடர்ச்சியான ஏசி துளை ஸ்ட்ரிப்பையும், சென்சார் மூலமாக கண்ட்ரோல் செய்யப்படும் படிக்க உதவும் விளக்கையும் சிறப்பம்சங்களாக ஏற்றுள்ளது.

ஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார்!! ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்

அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் 2021 ஏ4 செடான் காரை வடிவமைத்துள்ள கூறும் ஆடி, 2021ஆம் ஆண்டை துவங்குவதற்கு இந்த கார் சரியானதாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
New Audi A4 sedan listed on website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X