ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

புதிய ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே ரக எஸ்யூவியின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

ஆடி நிறுவனத்தின் பிரபலமான க்யூ5 எஸ்யூவியின் அடிப்படையிலான கூபே ரக மாடலாக எஸ்க்யூ5 கூபே மாடல் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த மாடல் விரைவில் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

முந்தைய மாடலில் இருந்து தோற்றத்தில் அதிக வித்தியாசங்கள் இல்லை. சிறிய அளவிலான வித்தியாசங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவிக்கு இதன் தாழ்வான பின்புற கூரை அமைப்பானது கூபே மாடலாக காட்டுகிறது.

ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

ஆடி நிறுவனத்தின் செயல்திறன் மிக்க மாடல்கள் பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு மாறிவிட்ட நிலையில், இந்த புதிய மாடலில் தொடர்ந்து டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

எனினும், இந்த எஸ்யூவியில் வி8 எஞ்சின் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சினுடன் இந்த புதிய மாடலை கொண்டு வருகிறது ஆடி கார் நிறுவனம். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 332 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

இந்த கூபே ரக எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி எஸ்க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே எஸ்யூவியின் படங்கள் வெளியீடு!

புதிய ஆடி எஸ்க்யூ5 எஸ்யூவியானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இந்த மாடலானது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே, பிஎம்டபிள்யூ எகஸ்4, லேண்ட்ரோவர் எவோக் கன்வெர்ட்டிபிள் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
German luxury car maker, Audi has released pictures of the new SQ5 performance SUV.
Story first published: Saturday, November 28, 2020, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X