கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

கொரோனாவினால் இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவில் சரிவை கண்டு வருகிறது. இது கடந்த 2 மாதங்களாக தான். ஏனெனில் இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டை சேர்ந்த பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதியதாக நுழைந்துள்ளன.

இதனை தொடர்ந்து தற்போதைய இக்கட்டான சூழ்நிலை சரியானவுடன் இந்தியாவில் களம்புக காத்திருக்கும் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

சிட்ரோன்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ க்ரூப் இந்தியாவில் தயாரிப்புகளை விற்பனை செய்ய சிகே பிர்லா க்ரூப் உடன் இணைந்துள்ளதின் விளைவாக பிஎஸ்ஏ க்ரூப்பின் சிட்ரோன் ப்ராண்ட் 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

மேலும் இந்த ப்ராண்ட்டில் பெரும்பான்மையான தயாரிப்புகள் பசுமை போக்குவரத்திற்கு வழி வகுக்கும் விதத்தில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் பிஎஸ்ஏ க்ரூப்பின் முதல் தயாரிப்பு மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரூ.30 லட்சம் விலையில் சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு அடுத்த மாடல்கள் தான் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.

MOST READ: தல எப்பவுமே கெத்துதான்... குடிசையில் வாழும் ஏழை குடும்பத்தை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்த அஜீத்

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

டெஸ்லா

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் மாடல்3 எலக்ட்ரிக் செடான் கார் மூலமாக நுழையவுள்ளது. கடந்த 2016லேயே உலகளவில் அறிமுகமாகிவிட்ட டெஸ்லா மாடல்3 காருக்கு உலகம் முழுவதில் இருந்தும் முன்பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

ஏனெனில் இந்த செடான் மாடலின் விலையை டெஸ்லா நிறுவனம் மிகவும் மலிவாக நிர்ணயித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தின் நெவாடா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் சிபியூ முறையில் சந்தைப்படுத்தப்படவுள்ள மாடல்3 எலக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் ரூ.40-50 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட ஃபெராரி கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

க்ரேட்வால் மோட்டார்ஸ்

சீன ப்ராண்ட்டான க்ரேட்வால், எஸ்யூவி மற்றும் பிக்-அப் வாகன தயாரிப்பிற்கு பிரபலமானது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2022ஆம் ஆண்டின் துவக்கதிலோ வருகை தரவுள்ள இந்த ப்ராண்ட், எஸ்யூவி கார்களை ஹாவல் பெயர்பலகையில் விற்பனை செய்யவுள்ளது.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

இத்தகைய பணிகளை முன்னுறுத்தி செல்ல க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் நம்பர்-1 ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியில் இருந்து கௌசிக் கங்குலி என்பவரை பணியில் அமர்த்தவுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவில் நுழைவதற்கு முன்னதாக நம் நாட்டு சந்தையை பற்றி தீவிரமாக ஆராய்ந்தும் வருகிறது.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி மாடல்களும், எலக்ட்ரிக் கார்களும் காட்சிக்காக வைக்கப்பட்டன. இந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த எச் எஸ்யூவி கான்செப்ட்டின் அடிப்படையில் எஸ்யூவி கார் இந்தியாவில் களமிறக்கப்படவுள்ளது.

MOST READ: அவ்வளவு அவசரம்... 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

செரி

சீன ஆட்டோ நிறுவனமான செரி, இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் உதவியின் மூலமாக நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செரி நிறுவனம் கடந்த 2012-லேயே டாடாவின் சொந்த ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் 50% நுழைந்துவிட்டதை பெரும்பான்மையானர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

டாடாவின் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மூலமாக தான் செரி நிறுவனம் சீனாவில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் மாடல்களை தயாரித்து வருகிறது. இதன் விளைவாக ப்ளாக்பேர்டு என்ற பெயரில் டாடா நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய எஸ்யூவி மாடல், செரி டிக்கோ 5எக்ஸ் எஸ்யூவி மாடலின் ப்ளாட்ஃபாரம் மற்றும் என்ஜின் தொழிற்நுட்பங்களை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

MOST READ: அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

ஃபா ஹெய்மா

மற்றொரு சீன நிறுவனமாக ஃபா ஹெய்மா ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம், பிஎம்டபிள்யூ மற்றும் மினி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள பேர்டு ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இந்திய செயல்பாடுகளுக்காக இணையவுள்ளது.

கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...

கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனத்தின் சார்பில் ஹெய்மா 7எக்ஸ், ஹெய்மா 8எஸ் மற்றும் பேர்டு இ1 மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மூன்று மாடல்களும் இந்தியாவில் அடுத்த 2-3 ஆண்டுகளில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Upcoming New Car Brands In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X