ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள் பட்டியல்!

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச வாகனக் கண்காட்சியின் மூலமாக இந்தியாவில் பல புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த கார்களின் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

01. மஹிந்திரா இ-கேயூவி100 மின்சார எஸ்யூவி

01. மஹிந்திரா இ-கேயூவி100 மின்சார எஸ்யூவி

இந்தியாவின் மிக குறைவான விலை மின்சார கார் மாடலாக மஹிந்திரா இகேயூவி100 மின்சார எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண கேயூவி100 எஸ்யூவியிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில், இதன் க்ரில் அமைப்பு மற்றும் புதிய அலாய் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள் பட்டியல்!

இந்த காரில் 15.9kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 147 கிமீ தூரம் வரை பணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி 45 நிமிடங்கள் பிடிக்கும். இந்த காரில் 40kW மின் மோட்டார் உள்ளது. 54.4 எச்பி பவரை அளிக்கும். ரூ.8.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இப்போதைக்கு இதுதான் மிக குறைவான விலை எலெக்ட்ரிக் கார் தேர்வாக இருக்கிறது.

02. கியா கார்னிவல்

02. கியா கார்னிவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கியா கார்னிவல் கார் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 9 சீட்டர் மாடல்களில் மிகவும் பிரிமீயமான எம்பிவி கார் மாடலாக வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள் பட்டியல்!

புதிய கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை வழங்கும். கியா கார்னிவல் கார் ரூ.24.95 லட்சம் முதல் ரூ.33.95 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

03. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245

03. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245

ஸ்கோடா ஆக்டேவியா காரின் மிகவும் சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலான ஆர்எஸ் 245 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மொத்தமாக 200 யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள் பட்டியல்!

புதிய ஆக்டேவியா ஆர்எஸ் 245 காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டி் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டேவியா ஆர்எ்ஸ 245 கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். ரூ.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

04. மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் மார்க்கோ போலோ

04. மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் மார்க்கோ போலோ

பயண விரும்பிகள் மற்றும் சாகசப் பயணம் செய்யும் பெரும் பணக்காரர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் நடமாடும் இல்லம் போன்ற வசதிகள் புதிய வி க்ளாஸ் மார்க்கோ போலோ சொகுசு காரை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காரில் படுக்கைகள், சமையல் செய்வதற்கான வசதி, குளிர்சாதனப் பெட்டி, பொருட்களை வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதிகளுடன் வந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள் பட்டியல்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் மார்க்கோ போலோ காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த கார் இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. இந்த வேரியண்ட்டுகள் முறையே ரூ.1.38 கோடி மற்றும் ரூ.1.46 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

05. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் கூபே

05. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் வகை வகையான சொகுசு மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் புதிய ஜிடி63எஸ் கூபே (4 டோர் மாடல்) என்ற பெர்ஃபார்மென்ஸ் வகை கூபே காரையும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் களமிறக்கி உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான புதிய கார்கள் பட்டியல்!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி63எஸ் கூபே காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 635 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடும். ரூ.2.42 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Here is the list of new cars that were launched at the Auto Expo 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X