ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான டாப் 11 புதிய கார்கள்... இந்தாங்க லிஸ்ட்!

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கார் வாங்க திட்டமிட்டிருந்த பலரும் ஆட்டோ எக்ஸ்போவை பார்த்துவிட்டு தங்களது திட்டத்தை இறுதி செய்ய காத்திருந்தனர். இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு உறுதியாகி இருக்கின்றன. அதில், இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார் மாடல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

01. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல்

01. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல்

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இந்த மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காரில் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

02. மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்

02. மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி இக்னிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

இந்த காரில் 1.2 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய மாடல் மிக விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

03. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

03. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆட்டோ எக்ஸ்போவில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மாடலாக உள்ளது. ஏனெனில், இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

ஹெக்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.14 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

04. ஸ்கோடா ரேபிட் பிஎஸ்-6

04. ஸ்கோடா ரேபிட் பிஎஸ்-6

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய ஸ்கோடா ரேபிட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தையில் களமிறக்கப்பட உள்ளது. இனி டீசல் எஞ்சின் மாடலில் விற்பனைக்கு கிடைக்காது என்று தெரிகிறது.

05. ரெனோ டஸ்ட்டர்

05. ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 156 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

அதிசெயல்திறன் மிக்க காம்பேக்ட் எஸ்யூவி வாங்க இருப்போருக்கு சிறந்த தேர்வாக ரெனோ டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் அமையும். இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் விற்பனைக்கு வரும்போது, இந்தியாவின் மிக சக்திவாய்ந்த காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை பெறும்.

06. ரெனோ ட்ரைபர் ஏஎம்டி

06. ரெனோ ட்ரைபர் ஏஎம்டி

ரெனோ நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடலாக ட்ரைபர் மினி எம்பிவி கார் மாறி இருக்கிறது. மிக குறைவான பட்ஜெட்டில் 7 சீட்டர் மாடலாக வந்திருப்பதுடன், அதிக சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

இதுவரை 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வானது மேனுவல் கியர்பா்ஸ் தேர்வில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ட்ரைபர் கார் மாடலானது ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஏஎம்டி ட்ரைபர் கார் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும். மேனுவல் மாடலைவிட ரூ.40,000 கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

07. டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்

07. டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் முக்கிய விஷயமாக, இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎஸ் பவரை வழங்கும் விதத்தில் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

அத்துடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை புதிதாக வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாகவும், மதிப்பாகவும் இருக்கும். இந்த மாடலுக்கு முன்பதிவு துவங்கிவிட்டது. எனவே, மிக விரைவில் சந்தைக்கு வந்துவிடும்.

08. டாடா க்ராவிட்டாஸ்

08. டாடா க்ராவிட்டாஸ்

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலான கிராவிட்டாஸ் ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

புதிய டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் புதிய டாடா கிராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

09. டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன்

09. டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன்

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் சஃபாரி எடிசன் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலானது பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் வலிமையான புதிய பம்பர் அமைப்பு, 17 அங்குல அலாய் வீல்கள், சஃபாரி எடிசன் பேட்ஜ், கருப்பு வணண பின்னணியுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

மேலும், இதன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 154 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

10. புதிய ஹூண்டாய் க்ரெட்டா

10. புதிய ஹூண்டாய் க்ரெட்டா

வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை மாடலின் வடிவமைப்பு மிகச் சிறப்பான மாற்றங்களுடன் வந்துள்ளது. கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். நேரடி இணையவசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

11. கியா சொனெட்

11. கியா சொனெட்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கியா சொனெட் என்ற பெயரிலான இந்த கான்செப்ட் மிக விரைவில் தயாரிப்பு நிலை மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தேர்வுகள் இந்த காரிலும் பயன்படுத்தப்படும்.

ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான 12 புதிய கார்கள்!

இந்த காரில் நேரடி இணைய வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி செயலி மற்றும் போஸ் ஆடியோ சிஸ்டம் போன்ற பல்வேறு பிரிமீயம் வசதிகளுடன் வருகிறது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Here are the new cars list confirmed for launch this year from Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X