ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுக்கு இணையான புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை சிட்ரோன் பிராண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனது கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் முடிவு செய்துள்ளது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம சென்னையில் நடந்த விழாவில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் முறைப்படி பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

துரதிருஷ்டவசமாக கொரோனா பிரச்னை காரணமாக, இந்த முதல் கார் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அண்மையில் பிஎஸ்ஏ குழுமம் தெரிவித்தது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

இந்த சூழலில், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை தொடர்ந்து, அடுத்த மாடலாக புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஹூண்டாய் வெனியூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு இணையானதாக 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்ட மாடலாக இருக்கும்.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவுக்கான இந்த புதிய எஸ்யூவியை தனது சிஎம்பி கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்க இருக்கிறது. சிட்ரோன் சி21 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி அழைக்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

மேலும், இந்த புதிய சிட்ரோன் சி21 காம்பேக்ட் எஸ்யூவியை குறித்த காலத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் சிட்ரோன் கார் மாடலாகவும் சி21 காம்பேக்ட் எஸ்யூவி இருக்கும் என்பது கூடுதல் தகவலாக உள்ளது. இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. டீசல் எஞ்சின் 130 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். சிறிது காலம் கழித்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை வழங்கவும் பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

சிட்ரோன் சி21 எஸ்யூவியை தொடர்ந்து, இதே பிளாட்ஃபார்மில் ஒரு பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஎஸ்ஏ திட்டமிட்டுள்ளது. மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியை தரும்.

ஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி!

சிட்ரோன் சி21 எஸ்யூவியை மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட ஜாம்பவான் மாடல்களுடன் மோத இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
French car maker, PSA Group is planning to launch new compact SUV in India by next year.
Story first published: Thursday, April 23, 2020, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X