1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

அதிசெயல்திறன் மிக்க புதிய கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடலை ஃபெராரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

சூப்பர் கார் தயாரிப்பில் உலக பிரபலமான ஃபெராரி கோடீஸ்வரர்களின் கனவு பிராண்டாக உள்ளது. டிசைன், செயல்திறன், தொழில்நுட்பம் என அசத்தும் ஃபெராரி நிறுவனத்திற்கு உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ஃபெராரி ரசிகர்களை பக்தர்கள் என்று அழைக்கும் அளவுக்கு அவர்கள் அந்த பிராண்டு மீது அதீத பற்று கொண்டுள்ளனர்.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

இந்த நிலையில், தனது பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் திறந்து மூடும் கூரை அமைப்புடைய புதிய கன்வெர்ட்டிபிள் ரக சூப்பர் கார் மாடலை வெளியிட்டுள்ளது. ஃபெராரி எஸ்எஃப்-90 ஸ்பைடர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த காரின் எஞ்சின் 1,000 எச்பி பவரை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

ஃபெராரி நிறுவனத்தின் கன்வெர்ட்டிபிள் ரக கார்களில் அதிக செயல்திறன் மிக்க கார் மாடலாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபெராரி கார் பந்தய அணியின் 90ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்ட ஃபெராரி எஸ்எஃப்-90 ஸ்ட்ராடேல் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார்கள் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் வந்துள்ளது. ஃபெராரி நிறுவனத்தின் பிரபலமான வி8 சிலிண்டர் அமைப்புடன் கூடிய 4.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 780 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதனுடன் மூன்று மின் மோடடார்களும் இணைந்து செயல்படும்.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

இந்த மின் மோட்டார்கள் 220 எச்பி பவரை இணைந்து வழங்கும். மொத்தமாக 1,000 எச்பி பவரை இந்த பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார்கள் இணைந்து வழங்கும் வல்லமை கொணடதாக வந்துள்ளது. எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக செலுத்தப்படுகிறது.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

புதிய ஃபெராரி எஸ்எஃப்-90 ஸ்பைடர் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 340 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. பெட்ரோல் எஞ்சினை அணைத்துவிட்டு இந்த காரின் மின் மோட்டார்கள் மூலமாக அதிகபட்சமாக 30 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

புதிய ஃபெராரி எஸ்எஃப்-90 ஸ்பைடர் காரில் திறந்து மூடும் வசதியுடன் கூடிய ஹார்டு டாப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூரை அமைப்பானது 14 வினாடிகளில் திறந்து கொள்ளும் வசதி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை திறந்து மூடுவதற்கு தக்கவாறு, பின்புற கண்ணாடியையும் மேலே எழுப்பி வைத்துக் கொள்வதற்கு ஏதுவான வசதியை கொண்டுள்ளது.

 1000 எச்பி பவர்... ஃபெராரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த எஸ்எஃப்-90 ஸ்பைடர்!

இந்தியாவில் இந்த புதிய கார் அறிமுகம் குறித்த தகவல் இதுவரை இல்லை. எனினும், இந்த கார் எதிர்காலத்தில் இந்தியாவில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Most Read Articles

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Italian super car maker, Ferrari has revealed SF90 spider hybrid super car globally.
Story first published: Saturday, November 14, 2020, 14:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X