2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மொத்த தயாரிப்பு லைன்-அப்பையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிறது. இந்த வகையில் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட குர்கா பிஎஸ்6 மாடல் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

ஃபோர்ஸ் நிறுவனம் கமர்ஷியல் மற்றும் தனிப்பயன்பாட்டு என கிட்டத்தட்ட தனது மொத்த வாகனத்தையும் புதிய அப்டேட்களுடன் முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

இதன்படி தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த 2020 குர்கா பிஎஸ்6 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆஃப்-ரோடு வாகனம் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்த நிலையில் தான் டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குர்கா வாகனத்தின் படங்களை சபூ பிரதர்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்க்கப்பட்ட இந்த எஸ்யூவி மாடலின் அறிமுகம் கொரோனாவின் தாக்கத்தினால் தள்ளிப்போகியுள்ளது. தற்போது டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால் விரைவில் இதன் அறிமுகத்தை சந்தையில் எதிர்பார்க்கலாம்.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

மற்றப்படி இந்த இரண்டாம் தலைமுறை குர்கா மாடலை பற்றி கூற வேண்டுமென்றால், தயாரிப்பு நிறுவனம் வாகனத்தின் டிசைனை மொத்தமாக திருத்தியமைத்து கூடுதலான வசதிகளை வழங்கியுள்ளது. இதில் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர்கள், புதிய க்ரில், பாடி க்ளாடிங் உடன் இருபுறங்களிலும் ரீடிசைனில் பம்பர்கள் மற்றும் ஸ்கிர்ட்ஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

16 இன்ச் சக்கரங்களில் 245/70 என்ற முகவரியை கொண்ட டயர்களை பெற்றுள்ள இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் சக்கர ஆர்ச்கள் முன்பை விட தடிமனானதாக வழங்க்ப்பட்டுள்ளதால் மொத்த காரும் கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

உட்புறத்தில் டேஸ்போர்டின் மையத்தில் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எம்ஐடி திரையுடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரண்டாவது வரிசையில் அகலமான இருக்கைகள் மற்றும் புதிய டிசைனில் வட்ட வடிவிலான ஏர் வெண்ட்ஸ் என மொத்த கேபினும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

2019 அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிகளின்படி பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த வாகனமாக விளங்கும் 2020 குர்காவின் சேசிஸ் மற்றும் பாடிஷெல் உள்ளிட்டவை பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த 2020 மாடலில் இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

புதிய குர்காவில் வழக்கமான 2.6 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ-டீசல் என்ஜினை தான் ஃபோர்ஸ் நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த டீசல் என்ஜின் உடன் இணைக்கப்படும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும்.

2020 மஹிந்திரா தாருக்கு எதிர் போட்டியாளர் ரெடி... ஷோரூம்களில் 2020 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6

இதனுடன் 2.2 லிட்டர் என்ஜினை தேர்வையும் எதிர்காலத்தில் குர்காவிற்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அறிமுகத்திற்கு பிறகு ஃபோர்ஸ் குர்காவிற்கு புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள மாருதி சுஸுகி ஜிம்னி உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
Force Gurkha BS6 Arrives At Dealerships: India Launch Expected Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X