மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

ஃபோர்டு இந்தியா நிறுவனம் புதிய ஃபிகோ காரை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் காரில் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் புதிய பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் mStallion டர்போ-பெட்ரோல் இன்ஜின் புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஓவர்டிரைவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின், ஃபோர்டு ஃபிகோ காரின் சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலை காட்டிலும் புதிய மாடலை இன்னும் வேகமானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

இந்த இன்ஜின் 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், டைரக்ட்-இன்ஜெக்ஸன், டர்போ-பெட்ரோல் யூனிட்டாக இருக்கலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 129 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதே ட்யூனிங் உடன் வழங்கப்பட்டால், 2021 ஃபோர்டு ஃபிகோ காரை இந்த இன்ஜின் மிகவும் சக்தி வாய்ந்த ஹேட்ச்பேக் காராக மாற்றும்.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

தற்போதைய நிலையில் ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் உள்ளன. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 100 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் ஸ்டாண்டர்டு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஃபோர்டு மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணி அமைத்திருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன் அடிப்படையில் மஹிந்திராவின் புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜினை ஃபோர்டு ஃபிகோ பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பலர் அதனை விரும்புகின்றனர். எனவே மஹிந்திராவின் புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜினை ஃபோர்டு ஃபிகோ பெற்றால், போட்டியாளர்களுக்கு கடும் சவாலை அளிக்க முடியும்.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில், ஃபோர்டு நிறுவனம் புதிய ஃபிகோ காரில், பல்வேறு டிசைன் மாற்றங்களை செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம். அத்துடன் புதிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திராவின் புண்ணியத்தில் சக்தி வாய்ந்த காராக மாறப்போகும் ஃபோர்டு ஃபிகோ... எப்படினு தெரியுமா?

அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே செயலிகளை சப்போர்ட் செய்யும் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை, புதிய ஃபிகோ காரில் ஃபோர்டு நிறுவனம் வழங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஃபோர்டு ஃபிகோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
New Ford Figo Hatchback Could Recieve Turbo-Petrol Engine From Mahindra: Reports. Read in Tamil
Story first published: Saturday, December 12, 2020, 21:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X