எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட ஆயத்தமாகும் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி!

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகி வரும் புதிய எஸ்யூவியில் இடம்பெறும் எஞ்சின் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

ஃபோர்டு கார் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை மஹிந்திரா நிர்வகிக்க உள்ளது. மேலும், இந்த கூட்டணியின் மூலமாக இரு பிராண்டுகளின் முதலீடுகளை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

அந்த வகையில், ஃபோர்டு மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் வர்த்தக திட்டங்கள் மற்றும் புதிய மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த கூட்டணியில் மொத்தம் 4 புதிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின்செய்தி கூறுகிறது.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அடிப்படையில் ஒரு புதிய எஸ்யூவி மாடல் ஃபோர்டு பிராண்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

சில மாற்றங்களுடன் ரீபேட்ஜ் முறையிலான மாடலாக இந்த எஸ்யூவி ஃபோர்டு பிராண்டில் விற்பனை செய்யப்படும். அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது W601 என்ற குறியீட்டுப் பெயரிலும், அதன் அடிப்படையில் ஃபோர்டு பிராண்டில் வர இருக்கும் மாடலானது W605 என்ற குறியீட்டுப் பெயரிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

அடுத்த ஆண்டு இந்த இரண்டு புதிய மாடல்களும் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு பிராண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட விலை குறைவான இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களும் அடுத்தடுத்து வர இருக்கின்றன.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

இதில் ஒரு எஸ்யூவியானது மஹிந்திரா பிராண்டில் எஸ்204 என்ற குறியீட்டுப் பெயரிலும், ஃபோர்டு பிராண்டில் பி745 என்ற குறியீட்டுப் பெயரிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த எஸ்யூவி மாடல்களில் ஒரே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்தான் பயன்படுத்தப்படும்.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

அதாவது, மஹிந்திராவின் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் 163 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இதே எஞ்சின் மஹிந்திராவின் மராஸ்ஸோ எம்பிவி காரில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலானது ஃபோர்டு பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எஸ்யூவிகள்

மேலும், மஹிந்திரா எஸ்204 எஸ்யூவியும், அதன் அடிப்படையிலான ஃபோர்டு பி745 எஸ்யூவியும் , அடுத்த நிதி ஆண்டு காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இந்த கூட்டணி மூலமாக வர்த்தகத்தை செம்மையாக நடத்த முடியும் என்று மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணி கருதுகிறது.

Most Read Articles

English summary
Ford and Mahindra announced a joint-venture in the Indian market back in October last year. The joint venture between the two brands has already commenced work in multiple areas, including new products for the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X