ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் ஃபோர்டின் எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் எதிர்கால தயாரிப்புகளுக்காக கூட்டணி சேர்ந்திருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். இந்த கூட்டணியில் இருந்து ஆறு புதிய தயாரிப்புகள் அடுத்ததாக வெளிவரவுள்ளன.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

இந்த கூட்டணிக்கு பிறகு முதல் அறிமுகமாக விரைவில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த புதிய தலைமுறை மஹிந்திரா தயாரிப்பை அடிப்படையாக கொண்டு ஃபோர்டின் எஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளது.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

கூட்டணி கொள்கையின்படி ஒரே ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இவை இரண்டிற்கும் இடையே தோற்றத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஃபன்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து 2021 எக்ஸ்யூவி500-யும், லெஜண்ட்ரி பினின்ஃபரினாவில் இருந்து ஃபோர்டு எஸ்யூவியும் டிசைனை பெற்று வரவுள்ளன.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

இந்த நிலையில் தற்போது இணையத்தில் கசிந்துள்ள படத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500-ஐ அடிப்படையாக கொண்டு உருவாகும் ஃபோர்டு எஸ்யூவி முழுவதும் தயாரிப்புகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த படத்தில் முன்பக்க க்ரில் ஆனது பல கிடைமட்டமான க்ரோன் லைன்களை கொண்டுள்ளது.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

க்ரில்லிற்கு பக்கவாட்டில் வித்தியாசமான பேட்டர்னை பார்க்க முடிகிறது. ஹெட்லேம்ப் பிளவுப்பட்ட வடிவில் உள்ளது. ஹெட்லேம்ப் அமைப்பு க்ரில்லிற்கு நேரெதிராக இருந்தாலும், டிஆர்எல்கள் அவற்றிற்கு சற்று மேற்புறத்தில் வழங்கப்படலாம். தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் ஃபோர்டு எஸ்யூவியில் அமெரிக்க கார்களுக்கான தொடுதல் நிச்சயம் இருக்கும்.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டேவியருக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதத்தில் வெளிவரும் இந்த எஸ்யூவி மாடல் தற்சமயம் சிஎக்ஸ்757 என்ற குறியீட்டு பெயரால் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்திய சந்தைக்கு வரும் ஃபோர்டின் இந்த முதல் எஸ்யூவி, டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டருக்கு முக்கிய போட்டி மாடலாக விளங்கவுள்ளது.

ஃபோர்டு எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் வெளியானது!! மஹிந்திராவின் உதவியுடன் தயாராகும் மாடல்

இந்த ஃபோர்டு எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் குறித்த எந்த விபரமும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் வழங்கப்படவுள்ள 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் இந்த ஃபோர்டு காரிலும் வழங்கப்படலாம்.

Note: Ford SUV Images are representative purpose only.

Most Read Articles

English summary
First Image Of Ford’s Mahindra XUV500-Based SUV For India Leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X