ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி நிறுவனத்தின் பிரபலமான ஏ7 கூபே ரக சொகுசு காரின் அடிப்படையிலான செயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக ஆர்எஸ்7 விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், இந்த கார் இரண்டாம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டது. இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஆர்எஸ்-7 காரில் முக்கிய மாற்றமாக 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இணைந்து செயல்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 592 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் கார் மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். எனினும், செயல்திறனை அதிகப்படுத்தும் சிறப்பு பேக்கேஜ்கள் மூலமாக இதன் டாப் ஸ்பீடு அளவை மணிக்கு 280 கிமீ முதல் 305 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி ஏ7 காரின் அடிப்படையிலான இந்த மாடல் அதீத செயல்திறனுக்கு தக்கவாறு தோற்றத்தில் மிகவும் மிரட்டலாக உள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், விசேஷ கருப்பு வண்ணம் தீட்டபட்ட க்ரில் அமைப்பு, பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, வசீகரமான பம்பர் ஆகியவை இந்த காரின் மிரட்டலான தோற்றத்திற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். இந்த காரில் 21 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. விருப்பத்தின் பேரில் 22 அங்குல அலாய் வீல்களும் கிடைக்கிறது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் பின்புறத்தில் எல்இடி லைட் பார் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கோள வடிவிலான இரண்டு புகைப்போக்கி குழல்கள், எலெக்ட்ரானிக் கட்டுப்பாட்டு முறையில் இயங்கும் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்திலும் மிகவும் பிரிமீயம் அம்சங்களுடன் வசீகரிக்கிறது. இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அல்கான்ட்ரா அப்ஹோல்ஸ்ட்ரி, தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் அமைப்பு, ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், அலுமினிய பேடில் ஷிஃப்டர்கள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என இந்த பட்டியல் நீள்கிறது.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் கூபே கார் ரூ.1.94 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 காம்படிஷன் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்ஸ் பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ் காருக்கு சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.10 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் முதல் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India has launched the much-awaited RS7 Sportback in the Indian market. The new Audi RS7 Sportback is offered with a starting price of Rs 1.94 crore, ex-showroom (India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X