புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. க்ராஸ்ஓவர் டிசைனில் மிக பிரம்மாண்டமான இந்த எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், மூன்றாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி கார் இன்று இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரியமான சிறுநீரக வடிவிலான முன்புற க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் முக்கிய அம்சமாக 500 மீட்டர் தூரம் வரை ஒளியை பாய்ச்சும் திறன் கொண்ட லேசர் ஹெட்லைட்டுகளும் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இதுவரை விற்பனையில் இருந்த இரண்டாம் தலைமுறை மாடலைவிட இந்த புதிய மாடலானது நீளத்தில் 26 மிமீ வரையிலும், அகலத்தில் 15 மிமீ வரையிலும், வீல் பேஸில் 42 மிமீ வரையிலும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், உயரம் 6 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 20 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரின் இன்டீரியரும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜர், கூல்டு - ஹீட்டடு க்ளவ்பாக்ஸ் வசதியும் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவியில் 580 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதியும் உண்டு. பின் இருக்கைகளை மடக்கினால் 1,530 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை பெற முடியும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவியில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ்40ஐ மாடல் எஸ்யூவியானது எக்ஸ்லைன் மற்றும் எம் ஸ்போர்ட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எக்ஸ்லைன் வேரியண்ட்டில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், ஸ்போர்ட்ஸ் லெதர் ஸ்டீயரிங் வீல் கவர், அடாப்டிவ் 2 ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது. எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் எம் லெதர் ஸ்டீயரிங் வீல் மற்றும் விசேஷ ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் உள்ளன. திறன் வாய்ந்த பிரேக் சிஸ்டம் மற்றும் புகைபோக்கி அமைப்பும் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவியானது ரிவர்சைடு புளூ மெட்டாலிக், கார்பன் பிளாக், மான்ஹாட்டன் மெட்டாலிக், ஆர்டிக் க்ரே, மினரல் ஒயிட், ஃப்ளமென்கோ ரெட் பிரில்லியண்ட் எஃபெக்ஸ், சொபிஸ்டோ க்ரே பிரில்லியண்ட் எஃபெக்ட், பிளாக் சஃபயர், ஆல்பைன் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதுதவிரவும், தான்சானைட் புளூ மெட்டாலிக் மற்றும் பிஎம்டபிள்யூ அமர்ட்ரின் மெட்டாலிக் ஆகிய விசேஷ வண்ணத் தேர்வுகளும் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி ரூ.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles

English summary
German luxury car maker, BMW has launched the third-generation X6 SUV in the Indian market today at a price of Rs.95 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X