புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா சிட்டி காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் கார் மாடல் என்பதல், இந்தியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

ஹோண்டா அக்கார்டு கார் போன்ற தோற்றத்தில் அதி நவீன டிசைன் மற்றும் தொழில்நுட்பங்களுடன் 5வது தலைமுறை மாடலாக புதிய ஹோண்டா சிட்டி கார் வர இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கார் வரும் மார்ச் 16ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா சிட்டி கார் 113 மிமீ அதிக நீளமும், 53 மிமீ அதிக அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 4,440 மிமீ நீளமும், 1,695 மிமீ அகலத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் வர இருக்கும் மாடலானது 2,589 மிமீ வீல் பேஸ் நீளம் பெற்றிருக்கிறது. தற்போதைய மாடலைவிட இது 11 மிமீ குறைவாக இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

முற்றிலும் புதிய வடிவமைப்பில், கூபே கார் போன்ற கூரை அமைப்புடன் புதிய ஹோண்டா சிட்டி தனது ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. இந்த காரில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா சிட்டி காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் விற்பனைக்கு வரும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

வெளிநாடுகளில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோ்ல எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த டர்போ பெட்ரோல் மாடல் வருமா என்பது சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா சிட்டி கார் ரூ.9.91 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. புதிய மாடல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், மாருதி சுஸுகி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Cardekho

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
According to report, Honda Cars India is planning to launch new gen Honda City car in India on March, 16.
Story first published: Thursday, February 13, 2020, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X