கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

கொரோனா போன்ற நெருக்கடிகளால், அண்மையில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனையில் சிறிய தொய்வு ஏற்பட்டது. எனி்னும், எஸ்யூவி மார்க்கெட்டில் தன்னை சிறந்த போட்டியாளராக தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

கடந்த மாதம் மத்தியில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கியா செல்டோஸ் வரும் வரை, எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்1 மாடலாக இருந்தது ஹூண்டாய் க்ரெட்டா. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 16ந் தேதி ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

புதிய டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் எஸ்யூவி மார்க்கெட்டில் தனது நம்பர் 1 இடத்தை பிடிக்கும் வேட்கையுடன் களமிறங்கியது. ஆனால், அறிமுகம் செய்யப்படும்போதே, ஒருபுறம் கொரோனா தாக்கம் மற்றும் கியா செல்டோஸ் என கடும் நெருக்கடிகளுடன் வந்தது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

இந்த நிலையில், முதல் மாதத்தில் 6,700 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் ஆட்டோமொபைல் துறை பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை சிறப்பானதாகவே கருத முடியும்.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ளதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

இந்த காரில் உட்புறமும் மிகவும் பிரிமீயமாக காட்சியளிக்கிறது. 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

கியா செல்டோஸ் காரில் வழங்கப்படுவது போன்றே இந்த காரிலும், புளுலிங்க் கனெக்ட்டெட் கார் செயலி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் மூலமாக ரிமோட் முறையில் பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் இந்த காரிலும் கொடுக்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாக இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

இந்த காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

இந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி லாவா ஆரஞ்ச், தைபூன் சில்வர், ரெட் மல்பெரி, போலார் ஒயிட், கேலக்ஸி புளூ, டைட்டான் க்ரே, டீப் ஃபாரஸ்ட், ஃபான்டம் பிளாக் ஆகிய சிங்கிள் டோன் வண்ணத் தேர்வுகளிலும், போலார் ஒயிட் - பிளாக் மற்றும் ஆரஞ்ச் - ஃபான்டம் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

 கொரோனா எஃபெக்ட்: ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் பாதிப்பு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து 17.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. கியா செல்டோஸ் காருக்கு கடும் போட்டியை கொடுக்கும் என தெரிகிறது. ஆனால், கொரோனா பிரச்னை முடிந்து நிலைமை சீரடையும்போது, இரு கார்களுக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
The all-new Hyundai Creta which was introduced in the Indian market recently. The Creta did manage to come close to the Seltos sales figures, however, fell short of less than 100 units. The 2020 Hyundai Creta registered 6,706 units of sales in March 2020, which also saw it enter the top-10 best-selling car list in India after quite a while — here is the entire list.
Story first published: Saturday, April 4, 2020, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X