சொகுசு கார்களை கதறவிடப்போகும் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார்... அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் உலக அளவில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல் பற்றிய முக்கியத் தகவல்கள், படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கியா மோட்டார் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான சொகுசு வகை எம்பிவி கார் கார்னிவல். பிரம்மாண்டத் தோற்றம், உட்புறத்தில் அதிகம் பேர் பயணிப்பதற்கான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவற்றுடன் ஒரு சிறந்த எம்பிவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கான அத்துனை அம்சங்களுடன் நிறைவான மாடலாக வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா கார்னிவல் காருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதே கார் வெளிநாடுகளில் செடோனா என்ற பெயரில் விற்பனையாகிறது. இந்த நிலையில், கார்னிவல் காரின் பயண அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, புதிய தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கடந்த சில மாதங்களாக இந்த கார் குறித்த படங்கள், தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது கார்னிவல் கார் முறைப்படி வெளியிடப்பட்டு இருக்கிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

நான்காம் தலைமுறை மாடலாக அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருக்கும் இந்த புதிய கார்னிவல் கார் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலைவிட நீளத்திலும், வீல் பேஸ் அளவிலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த காரின் நீளம் 40 மிமீ வரையிலும், அகலம் 10 மிமீ வரையிலும், வீல்பேஸ் 30 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இதனால், தற்போதைய மாடலைவிட புதிய தலைமுறை கார்னிவல் கார் தோற்றத்திலும், உட்புற இடவசதியிலும் இன்னும் பிரம்மாண்டத் தோற்றத்தையும், விசாலமான இடவசதியையும் பெற்றிருக்கிறது. இதன் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி 627 லிட்டர் கொள்திறன் கொண்டதாகவும் மேம்பட்டு இருக்கிறது. பின் வரிசை இருக்கைகளை மடக்கினால், 2,905 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதியை பெற முடியும்.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கார்னிவல் காரை 'கிராண்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்' என்று கியா மோட்டார் நிறுவனம் குறிப்பிடுகிறது. முன்புறத்தில் பாரம்பரிய புலிமூக்கு வடிவத்தை நினைவூட்டும் க்ரில் அமைப்பு, வைரக் கற்கள் பதிக்கப்பட்டது போன்ற டிசன், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் மிகவும் வசீகரமாக தோற்றமளிக்கிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

பின்புறத்தில் எல்இடி லைட் பார் கொடுக்கப்பட்டு இருப்பதும் காரின் பிரம்மாண்டத்திற்கு கூடுதல் வசீகரத்தை சேர்க்கிறது. தற்போதைய மாடலின் நளினமான டிசைன் அம்சங்கள் தூக்கப்பட்டு, மிகவும் கூர்மையான முனைகளுடன் மாற்றம் கண்டுள்ளது. எனவே, செவ்வக வடிவிலான தோற்றத்திற்கு மாறியிருப்பதுடன், பார்த்தவுடனே கவரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கார்னிவல் காரின் உட்புற இடவசதி சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், 3 வரிசை மற்றும் 4 வரிசை இருக்கை அமைப்புடைய மாடல்களில் கிடைக்கும். அதாவது, அதிகபட்சமாக 11 சீட்டர் வரையில் பயணிக்கும் வசதியை வழங்கும்.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கியா கார்னிவல் காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. டச் சென்சிட்டிவ் சுவிட்சுகளும் இதன் முக்கிய அம்சமாக கூறலாம். ஷிஃப்ட் பை ஒயர் டிரான்ஸ்மிஷன் இதில் வழங்கப்படுகிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

வெளிநாடுகளில் விற்பனைக்குச் செல்லும் புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில் 3 விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. இதன் 3.5 லிட்டர் ஜிடிஐ வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 209 பிஎச்பி பவரையும், 355 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டாவதாக 3.5 லிட்டர் எம்பிஐ வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 268 பிஎச்பி பவரையும், 332 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

அடுத்து, இதன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவரையும், 404 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது டீசல் எஞ்சின் தக்கவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கியா கார்னிவல் காரில் முன்புறத்தில் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், சப்த தடுப்பு அமைப்பும் மேம்படுத்தப்பட்டு இருப்பதால், சொகுசானப் பயணத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

 புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கியா கார்னிவல் காரில் முன்புற மோதலை தடுக்கும் தொழில்நுட்பம், தடத்தைவிட்டு பிசகாமல் செல்வதை உறுதி செய்யும் வசதி, ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2022ம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
The new generation Kia Carnival has been revealed for the international market.
Story first published: Tuesday, August 18, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X