அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. கார்னிவல் காரின் நேர்த்தியும், பிரம்மாண்ட்டத்தையும் கியா மோட்டார் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது இந்த படங்கள் மூலமாக தெரிகிறது. கூடுதல் விபரங்கள், புதிய தலைமுறை கார்னிவல் காரின் படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

கியா மோட்டார் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான சொகுசு ரக எம்பிவி கார் மாடலான கார்னிவல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மதம் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்னிவல் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

இந்தியாவில் கார்னிவல் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த கார் மாடல் வெளிநாடுகளில் கியா செடோனா என்ற பெயரில் விற்பனையில் உள்ளது. தற்போது இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனை செய்யப்படுகிறது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் மனதில் வைத்து கியா கார்னிவல் கார் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் டீசர் வெளியிடப்பட்டது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

உலக அளவில் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த நான்காம் தலைமுறை கியா கார்னிவல் கார் ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், தற்போது முதல்முறையாக நான்காம் தலைமுறை கார்னிவல் காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட நிலையில், பாரம்பரிய டிசைன் மற்றும் தோற்றத்தை தக்க வைக்கும் வகையில் வெகு நேர்த்தியாக கியா மோட்டார் நிறுவனம் இந்த காரை மேம்படுத்தி உள்ளது. பழைய காரில் இருந்த நளினமான வடிவமைப்பு அம்சங்கள் தற்போது சதுர வடிவிலான தோற்றத்தை தரும் வகையில் இருப்பதுடன், மிக மிக நேர்த்தியாக தெரிகிறது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

கியா மோட்டார் நிறுவனத்தின் பாரம்பரியமான புலி மூக்கு வடிவ க்ரில் அமைப்பும் மிகச் சிறப்பாக மாற்றப்பட்டு இருக்கிறது. தற்போது அதில் இருக்கும் வலை பின்னல் அமைப்பும், வடிவில் சிறியதாகவும் வசீகரமாகவும் மாறி இருக்கும் எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மற்றும் பகல்நேர விளக்குகளின் டிசைன் ஆகியவை ஒரே இணைப்பில் உள்ளது போன்று மிக அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

காரின் முகப்புக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் வலிமையான பம்பர், பானட், புதிய அலாய் வீல்கள், கான்ட்ராஸ்ட் பூச்சுடன் சி பில்லர் ஆகியவற்றுடன் வசீகரிக்கிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஒரே சட்டத்தில் இணைக்கப்பட்டு சொகுசு கார் போல தோற்றமளிக்கிறது. பம்பர் பிரம்மாண்டத்தை அதிகரிக்கிறது. உட்புறத்திலும் பல்வேறு மாறுதல்களுடன் அடுத்த நிலைக்கு இந்த கார் கொண்டு செல்லப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

புதிய கியா கார்னிவல் காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்த தகவல் இல்லை. ஆனால், தற்போதைய மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு தக்க வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைக்கப்பட்ட ஹைப்ரிட் மாடல்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 அடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்!

அடுத்த ஆண்டு புதிய தலைமுறை கார்னிவல் காரை தனது தாயகமான தென்கொரியாவில் அறிமுகம் செய்ய கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2022ம் ஆண்டு இந்தியாவில் இந்த புதிய தலைமுறை கார்னிவல் கார் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த கார் சொகுசு கார்களுக்கு இணையான அம்சங்களையும், மிகச் சரியான விலையிலும் இருக்கும் என்பதால், வாடிக்கையாளர் வட்டத்தை அதிகரிக்கும் என நம்பலாம்.

Most Read Articles

English summary
Kia Motors have released the first set of images unveiling the 2021 Carnival MPV for the global markets. The 2021 Kia Carnival will be the fourth-generation iteration of the premium MPV/minivan once introduced in international markets.
Story first published: Wednesday, June 24, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X