2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

இதுவரை பார்த்திராத வெள்ளை நிறத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனம் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை தார் வாகனத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

ஆஃப்-ரோடு பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் 2020 மஹிந்திரா தார் அதேநேரம் வாடிக்கையாளர்கள் பலரால் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

அவற்றில் சிலவற்றை இந்த 2020 வாகனத்தின் அறிமுகத்தில் இருந்தே அவ்வப்போது பார்த்து நாம் பார்த்துவரும் நிலையில் தற்போது மீண்டும் உரிமையாளர் ஒருவருக்கு பிடித்தமான தோற்றத்தில் மாடிஃபை செய்யப்பட்ட 2020 தாரை பற்றி இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.

மேலே உள்ள இந்த மாடிஃபை வாகனம் தொடர்பான வீடியோ டனீஷ் டனீஷ்லோஹியா என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் முழுவதும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட புதிய தாரை பார்க்கலாம்.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

இந்த நிறத்தில் மஹிந்திரா நிறுவனம் தாரை விற்பனை செய்வது இல்லை. கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் வெள்ளை நிற பெயிண்ட் உடன் மிகவும் அருமையான தோற்றத்தை வழங்குகின்றன.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

மேலும் கருப்பு நிறம் முன்பக்க & பின்பக்க பம்பர்கள் மற்றும் சக்கர வளைவுகளிலும் தென்படுகின்றன. தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட அலாய் சக்கரங்கள் துப்பாக்கி உலோகத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டு மீண்டும் பளபளப்பான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

இந்த வீடியோவில் நமக்கு காட்சி தருவது 4 இருக்கைகளுடன் தேவைக்கு ஏற்றாற்போல் மேற்கூரையை மாற்றக்கூடிய 2020 தாரின் சாஃப்-டாப் வெர்சனாகும். வெளிப்பக்கம் வெள்ளையில் இருக்க வாகனத்தின் உட்புற கேபின் முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

பெயிண்ட் மாற்றம் மட்டுமின்றி இந்த தாரில் ஹெட்லைட் அமைப்பும் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான ஹலோஜன் செட்அப் ஆனது எல்இடி டிஆர்எல்கள் உடன் ப்ரோஜெக்டர் எல்இடி யூனிட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர் உடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவே. 2020 மஹிந்திரா தார் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்!! வெள்ளை-கருப்பு செம்ம காமினேஷன்..

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. சாஃப்-டாப் மட்டுமின்றி நிரத்தரமாக பிரிக்கவே முடியாத மேற்கூரையுடன் ஹார்ட்-டாப் வெர்சனிலும் கிடைக்கும் 2020 தாரின் ஸ்டாக் வடிவமே பலரை கவர்ந்து வருகிறது. அதுவே இவ்வாறான தோற்றத்தில் எல்லாம் வழங்கப்பட்டால் முன்பதிவுகளால் மஹிந்திரா வெப்சைட்டே க்ராஸ் ஆகிவிடும்.

Most Read Articles

English summary
First all-new 2020 Mahindra Thar in white colour is an owner’s mod job
Story first published: Sunday, December 20, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X