புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை விபரம் கசிந்தது... இந்த விலையில் வந்தால் கண்டிப்பா புக் பண்ணலா

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலைப் பட்டியல் சமூக ஊடகங்கள் வாயிலாக கசிந்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

கடந்த மாதம் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திரா தார் எஸ்யூவி முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்களையும், ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களையும் சுண்டி இழுத்துள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

ஆஃப்ரோடு எனப்படும் கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கான பயன்பாடு மட்டுமின்றி, சாதாரண சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற பல்வேறு அம்சங்களுடன் வருவதால் எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த எஸ்யூவியை பார்த்ததுமே வாங்குவதற்கு பிரபலங்கள் பலரும் கூட விருப்பம் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

இந்த சூழலில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி வரும் அக்டோபர் 2ந் தேதி விலை அறிவிப்புடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விலைப் பட்டியலானது சமூக ஊடகங்கள் மூலமாக கசிந்துள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

புதிய மஹிந்திரா தார் எஸ்யவியானது ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களில் பல வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு மட்டுமான மாடலானது ஏஎக்ஸ் என்ற பெயரிலும், குடும்பத்தினருடன் பயணிப்பதற்கும், ஆஃப்ரோடு மற்றும் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏதுவான அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலானது எல்எக்ஸ் என்ற பெயரிலும் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

இந்த நிலையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.9.75 லட்சம் ஆரம்ப விலையில் வர இருப்பதாக தெரிய வந்துள்ளது. புதிய தார் ஏஎக்ஸ் சாஃப்ட் டாப் பெட்ரோல் மேனுவல் மாடலானது ரூ.9.75 லட்சத்திலும், ஏஎக்ஸ் சாஃப்ட் டாப் டீசல் மேனுவல் மாடலானது ரூ.10.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

அடுத்து கன்வெர்ட்டிபிள் கூரை (கழற்றி மாட்டும் வசதி) அமைப்புடைய மாடலின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.10.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், டீசல் மாடலுக்கு ரூ.10.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

நிரந்தரமான ஹார்டு டாப் கூரை அமைப்புடைய எல்எக்ஸ் டீசல் மேனுவல் மாடலுக்கு ரூ.11.20 லட்சமும், டீசல் ஆடடோமேட்டிக் மாடலுக்கு ரூ.12.25 லட்சமும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.12.49 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது 4 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியானது 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ளது. 1,844 மிமீ உயரமும், 2,450 மிமீ வீல் பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. 57 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 228 மிமீ என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதேநேரத்தில், மணிக்கு 165 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

புதிய தார் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரோல் ஓவர் மிட்டிகேஷன் தொழில்நுட்பம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கசிந்தது!

தற்போது வெளியாகி இருக்கும் விலைப் பட்டியலில் புதிய தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், அது நிச்சயம் நல்ல மதிப்புவாய்ந்த தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Gen Mahindra Thar SUV Prices Leaked ahead of its launch in India.
Story first published: Thursday, September 10, 2020, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X