அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!!

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட பின்னர் 2020 மஹிந்திரா தார் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும் வீடியோ இதோ...

புதிய தலைமுறை மஹிந்திரா தார் இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்சமயம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு இந்த வாகனம் கிடைத்தாலும், முன்பதிவு 15,000 தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும் வீடியோ இதோ...

மஹிந்திரா நிறுவனம் தாருக்கு ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. இவை வாகனத்தின் தோற்றத்தை மாற்றக்கூடியவைகளாக மட்டும் இல்லாமல், அதேநேரம் பயண சவுகரியம் மற்றும் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனை மேம்படுத்துபவைகளாகவும் உள்ளன.

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும் வீடியோ இதோ...

இத்தகைய ஆகஸஸரீகளில் முன்பக்க க்ரில்லிற்கு கருப்பு நிற க்ளாடிங், பம்பரில் கீறல்கள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பான், ஏர் டேம் தொகுப்பு, க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட கதவு கைப்பிடிகள், டெயில்லைட்கள், ஹெட்லேம்ப்கள், மூடுபனி விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவை பொருத்தப்பட்ட பின்னர் உங்களது 2020 தார் எப்படி இருக்கும் என்பதை விபிஒ லைஃப் என்ற யுடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவற்றை வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை ஷோரூமில் வாங்கும்போதே கூடுதல் தேர்வாக டீலர்களிடம் இருந்து பெறலாம்.

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும் வீடியோ இதோ...

மேற்கூறப்பட்ட ஆக்ஸஸரீகள் மட்டுமின்றி எலக்ட்ரிக் வின்ச், ஜெர்ரி கேன் வைப்பதற்கு தேவையான ஹேங்கர், துணை விளக்குகள், வேறொரு வாகனத்தை பின்னால் இருந்து இழுத்து செல்வதற்கும், பழுதானால் தாரை இழுத்து செல்வதற்கு முன்புறத்திலும் கொக்கிகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டேஷ் கேம்ஸ், பின் கதவில் அலமாரி தட்டு மற்றும் கேபின் தரைபாய்கள் போன்ற ஆக்ஸஸரீகளையும் 2020 தாருடன் வாடிக்கையாளர் பெறலாம்.

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும் வீடியோ இதோ...

புதிய தலைமுறை தாரில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் 150 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனையும், டர்போ-டீசல் என்ஜின் 130 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வாகனத்திற்கு வழங்குகின்றன.

அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும் வீடியோ இதோ...

இந்த இரு என்ஜின்களுடனும் 4-சக்கர ட்ரைவ் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. விற்பனையில் எந்தவொரு வாகனத்தின் போட்டியினையும் தற்போதுவரை சந்திக்காமல் விற்பனை செய்யப்படும் 2020 தாரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.9.80 லட்சத்தில் இருந்து ரூ.13.75 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Mahindra Thar Customised With Official Accessories – Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X