Just In
- 28 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்!! வெளியான ஸ்பை படங்கள் இதோ..
மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. இந்த வகையில் மீண்டும் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த 2021 மஹிந்திரா காரின் ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் வருகிற 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக இந்த கார் தீவிர சோதனை ஒட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போது மீண்டும் ஹிமாச்சல பிரதேசம் மணலி பகுதியில் இந்த கார் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்கள் 4X4 இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்பை படங்களில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஸ்பை படங்களின் மூலம் 2021 எக்ஸ்யூவி500 முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தை பெற்றுள்ளதை பார்த்திருந்தோம். மேலும் தற்போதைய வெர்சனை காட்டிலும் இந்த புதிய தலைமுறை கார் பரிமாண அளவுகளையும் அதிகமாக பெற்றுள்ளது.

2021 எக்ஸ்யூவி500 காரில் எல்இடி டிஆர்எல்கள் உடன் முற்றிலும் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், பெரிய முன்பக்க க்ரில், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள், அப்டேட்டான எல்இடி டெயில்லைட்கள், பெரிய அளவில் சன்ரூஃப், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஒஆர்விஎம்கள் உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இவற்றுடன் காரின் உட்புறமும் சில குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுவரவுள்ளது. இதில் மெர்சிடிஸ் கார்களில் உள்ளதை போன்ற பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானதாக அடங்குகிறது.

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடியதாக வழங்கப்படவுள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ப்ரீமியம் தரத்திலான லெதர் உள்ளமைவுகளுடன் இரு நிறங்களில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

50:50 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ள பின் இருக்கை வரிசைக்கும் ஏசி துளைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பயணிகளுக்கான ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளையும் 2021 எக்ஸ்யூவி500 கார் பெற்று வரவுள்ளது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் அதே 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 2020 மஹிந்திரா தாரின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் வழங்கப்படவுள்ளது. இவை இரண்டும் 2020 தாரில் வெளிப்படுத்தும் ஆற்றலைதான் புதிய எக்ஸ்யூவி500-லும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படவுள்ளது. இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப காரின் எக்ஸ்ஷோரூம் விலை சிறிது உயர்த்தப்பட உள்ளது உறுதி. அறிமுகத்திற்கு பிறகு 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கியா செல்டோஸ், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல்களுக்கு போட்டியாக விளங்கவுள்ளது.