வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுகம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி கார்களின் புதிய தலைமுறை வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் பரபரப்பாக இயங்கி கொண்டுள்ளது. இதில், முதலாவதாக தார் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்ததை விட, புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்வதால், புதிய தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நீண்ட காத்திருப்பு காலம் மட்டுமே வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

இதற்கு அடுத்தபடியாக எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களின் புதிய தலைமுறை மாடல்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் வருகைக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை மாடல் வரவிருப்பதால், தற்போதைய தலைமுறை எக்ஸ்யூவி500 காரின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே குறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய தலைமுறை மாடலுடன் சேர்த்து, தற்போதைய தலைமுறை மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் தற்போதைய தலைமுறை மாடலின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியில், 2.0 லிட்டர் mStallion டி-ஜிடிஐ டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

அதே சமயம் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்படவுள்ளதால், தற்போதைய தலைமுறை மாடலை காட்டிலும், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விலை 1 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 தொடர்ந்து போட்டியிடும்.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது!

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை தொடர்ந்து, ஸ்கார்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா களமிறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
New-Gen Mahindra XUV500 SUV India Launch Details, Expected Price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X